உலகக் கிண்ணத் தொடரில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துகொண்டு இருந்தார்.

கொரி ஹெனடர்சன் 43 ஓட்டங்களுடன் இருந்த போது ஜீவன் மெண்டிஸ் அவரின் பிடியெடுபை நழுவ விட்டார். இதனையடுத்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹென்டர்சன் 75 ஓட்டங்களை பெற்றதோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் தன்மையை மாற்றியமைத்த கொரி ஹென்டர்சனின் பிடியெடுப்பை நழுவிட்டதும் இல்லாமல் ஜீவன் மெண்டிஸ் சிரித்தமையினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதோடு கிரிக்கெட் ரசிகளுக்கும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் இடையே பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.

 205715

இந்நிலையில் ஜீவன் மெண்டிஸ் ஏன் அவ்வாறு சிரித்தார் என்பதன் உண்மை தெரியவந்துள்ளது. அதாவது அவர் பிடியெடுக்கும் போது பந்து கைகளிருந்து நழுவி அவரின் மர்ம உறுப்பில் பட்டுள்ளது. இதனால் தான் அவர் புன்னகைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version