மங்களூரு: தன்னுடன் படிக்கும் மாணவிகளின் மடியில் படுத்தபடி மாணவன் இருக்கும் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகி, மங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூரு அருகே உள்ள கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ் (20). இவர், மங்களூருவில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், முகமது ரியாஸ் தனது கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளின் மடியில் படுத்து கிடப்பது போன்ற படம் வாட்ஸ் அப்’ -பில் வெளியானது.
இந்த படம் ‘வாட்ஸ் அப்’ மூலமாக மங்களூரு நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி முகமது ரியாஸ் தனது வீட்டில் நண்பர்களான வினித், ரித்தீஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தார்.
இதில் காயம் அடைந்த முகமது ரியாஸ், மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, அவர் சூரத்கல் காவல்துறையில் புகார் செய்தார்.
அதில், ‘வாட்ஸ் அப்’பில் என்னுடன் பயிலும் 5 மாணவிகளின் மடியில் நான் படுத்து இருப்பது போல படம் சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் இருப்பது நான் அல்ல. எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.
ஆனால் தன்னை மர்மநபர்கள் தாக்கியது பற்றி முகமது ரியாஸ் புகாரில் குறிப்பிடவில்லை. இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போதுதான் முகமது ரியாஸை மர்மநபர்கள் காரில் கடத்தி தாக்கியிருப்பது தெரியவந்தது.
மேலும், முகமது ரியாஸை தாக்கிய மர்மநபர்கள் இன்னொரு பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, முகமது ரியாஸை, மாணவிகளுடன் சேர்த்து சித்தரித்து படம் வெளியிட்டதாக கூறி அந்த கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து கல்லூரி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
முதல் கட்ட நடவடிக்கையாக மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், இந்த புகைப்படத்தை வெளியிட்டோர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.