வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் மக்களை நாடு திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் அகதிகளாக இந்தியாவிற்கு சென்று, மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் குறித்து நியூஸ் பெஸ்ட் இன்று ஆராய்ந்தது்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்கள் இன்றும் முகாம்களின் தமது வாழ்நாளை கடத்தி வருகின்றனர்.

அகதிகளாக இந்தியாவிற்கு சென்று, மீண்டும் பல்வேறு உறுதிமொழிக்கு மத்தியில் நாட்டிற்கு வருகைத் தந்த பலர் இவர்களில் அடங்குவர்.

அகதிகளாக வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள் நாடு திரும்பியதும், உள்நாட்டு அகதிகளாக வவுனியா சிதம்பரபுரம் முகாமில் வாழ்வது தமக்கு மிகவும் வேதனையான உள்ளது என்று மக்கள் புலம்புகின்றனர்.

அவர்களின் இன்றைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக நியூஸ் பெஸ்ட் குழாத்தினர் அண்மையில் அங்கு சென்றிருந்தனர்.

வவுனியா – சிதம்பரபுரம் பகுதிக்கு சென்ற எம்மால், அவர்களின் இன்றைய நிலைமையை காண முடிந்தது.

நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் 1990ஆம் ஆண்டு இவர்கள் இலங்கையிலிருந்து படகில் மூலம் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியிலுள்ள முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான வசதிகளை அந்த நாட்டு அரசாங்கம் அப்போது ஏற்படுத்தி கொடுத்திருந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு நான்கு முதல் ஐந்து வருடங்களை இரேமேஸ்வரத்தில் கடத்திய இவர்கள், பல்வேறு உறுதி மொழிகளுக்கு மத்தியில், 1995ஆம் ஆண்டு மீண்டும் தாயகம் திரும்பினர்.

எனினும், அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் 20 வருடங்கள் கடந்தும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பதே அவர்களின் கவலை…!

இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் 20 வருடங்களுக்கு மேல் இன்றும் எவ்வித உதவிகளும் இன்றி, நிர்கதியான நிலையில் வாழ்ந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version