மருத்துவம் கற்பதே நோக்கமாக இருந்த ஜெயலலிதாவின் கவனம் ஒரு போதும் சினிமாவில் நிலைத்ததில்லை. விதி வேறு மாதிரி நிர்ணயித்தது.

இயக்குனர் வேதாந்தம் ராகவைய்யாவின் கன்னட திரைப்படத்தில் ஜெயலலிதாவின் தாய் சந்தியா நடித்துக் கொண்டு இருந்தார்.

நன்ன கர்த்த்வியா என்ற அப்படத்துக்காக இயக்குனர் ஓர் இளம் நடிகையைத் தேடிக் கொண்டு இருந்தார். ஒருத்தரும் பொருந்தி வரவில்லை.

jeya-5ஜெயலலிதாவின் தாய் சந்தியாவிடம் கேட்ட போது பிடிவாதமாக மகளை நடிக்க அனுப்ப மறுத்துவிட்டார். ”மருத்துவம் கற்பதே அவளது நோக்கம்.

அதுவும் முதல் படத்திலேயே ஒரு விதவையாக என் மகள் நடிப்பதை என்னல் நினைத்துக் கூட பார்க்க முடியாது.” என்று ஒரேயடியாக மறுத்தார்.

பல முறை வற்புறுத்திய பின்னர் அம்முவிடம் அம்மா கேட்ட போது, ‘‘நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை’’ என்றாள்.

தன் மகள் பள்ளிக்கூடத்தில் படிப்பதால் விடுமுறை நாள் மட்டுமே படப்பிடிப்புக்கு வருவாள் என்ற ஒப்பந்தத்தில் சந்தியா மகளை நடிக்க அனுப்பினார். ஒரு நாள் ஒப்பந்தம் பின் வாழ்க்கை ஒப்பந்தமானது சரித்திரம்.

பள்ளிப் படிப்பில் அம்மு படு சுட்டி. மெட்ரிக் ரிசல்ட் வந்தது. பரீட்சையில் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்த அம்முவுக்கு மேற்படிப்புக்கு சிறப்பு ஸ்கெலர்ஷிப் கொடுத்தார்கள்.

அம்முவும் கல்லூரியில் சேர்ந்து சென்றும் வந்தாள். சிறு வயதிலிருந்தே ஒலிபரப்பாகும் இசையைக் கேட்டால் அதற்கேற்ப நடனமாடத் தொடங்குவாள் அம்மு.

நடனத்தின் மீது அவளுக்குள்ள ஆர்வத்தை கண்ட தாய் , நடன ஆசிரியை திருமதி கே.ஜே.சரசாவிடம் நடனப்பயிற்சிக்கு . ஏற்பாடு செய்தார். விரைவில் கற்றுத் தேறியதால் நடன அரங்கேற்றம் 1960 இல் மயிலை, ரசிக ரஞ்சனி சபாவில் இடம்பெற்றது.

அதற்கு தலைமை   தாங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ”பிற்காலத்தில் இவள் சினிமாவில் நடித்து பெரிய நடிகை எனப் பெயர் எடுப்பாள் ”என்று வாழ்த்தினார்.

சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு படிக்கும் போதே நாடகத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதுவும் ஆங்கில நாடகம்.

வை.ஜி.பார்த்தசாரதி குழுவினர் நடத்திய நாடகம் அது. ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசும் அம்முவுக்கு அந்த நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத்தது.

இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர் நடிகரும், அரசியல் வாதியும் ஜெயின் நலம் விரும்பியுமான சோ. அனைவரும் அம்முவின் நடிப்பைப் பாராட்டினார்கள்

சங்கர் கிரி (ஜனாதிபதி வி.வி.கிரியின் ன் மகன்) ஆங்கிலத்தில் விவரணப் படம் ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்.

அதில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார். சனி, ஞாயிறுகளில் படப்பிடிப்பு, அதுவும் ஆங்கிலப் படம். இரண்டையும் எண்ணிப் பார்தது சந்தியா ஒத்துக் கொண்டார்.

தொடர்ந்து கதாசிரியர் – டைரக்டர் ஸ்ரீதர் அம்முவுக்குத் தன் படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார்.

படம் வெண்ணிற ஆடை. அம்முவுக்குப் படிப்பா? நடிப்பா? இதை முடிவு செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை தாய் சந்தியாவுக்கு. சந்தர்ப்பங்கள் தேடித்தான் வந்தன.

” சிலருக்குப் பிடிப்பது, பலருக்குப் பிடிப்பதில்லை

பலருக்குப் பிடிப்பது, சிலருக்குப் பிடிப்பதில்லை

சில பலருக்கும், பல சிலருக்கும் பிடிக்காதவை

ஐயகோ! எனக்கு மட்டும் பிடிப்பது ஏனோ ? ”

வசனமாக வெண்ணிற ஆடையில் வரும் இந்த வசனமே வாழ்க்கையாகிப் போன கோமளவள்ளி என்ற ஜெயின் பெயர் ஜெயலலிதா என மாறிப் போனது  இந்த கணத்தில்    தான்.

மிகப் பெரிய வெற்றிப் படமான இதில் ஜெ பெற்ற சம்பளம் வெறும் மூவாயிரம் ரூபாய் தான்.

இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது எது? பி ஆர் பந்துலு சிவாஜியை வைத்து வெற்றிப்படங்களாக எடுத்த கால கட்டம் அது. எம் .ஜி. ஆரை வைத்து படமெடுக்க ஆசைப்பட்ட பி ஆர் பந்துலு, ஆயிரத்தில் ஒருவன்’ படத்தைத் தொடங்கினார்.

எம். ஜி. ஆரின் கை ராசி ஜெயின் திரைப்பட கிராப் ஏறியது. இரண்டே ஆண்டுகளில், பேபி ஜெயலலிதா செல்வி ஜெயலலிதாவாக சினிமா உலகில் உலா வர ஆரம்பித்தார். 14 படங்கள் கைவசம் இருந்தன.

1968 இல் மட்டும் மொத்தம் 20 படங்கள் வந்தன.

ஆயிரத்தில் ஒருவன் , ஆயிரத்தில் ஒருவரான எம் ஜி. ஆருக்கு ஜெயலலிதாவின் திறமைகள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஒரு சம்பவம் இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும்.

கோவாவுக்கு அருகில் இருந்த கார்வாரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு ஜெயலலிதா வரத் தாமதமானது.

தவறுதலாக அவரை விட்டு விட்டு படப்பிடிப்புக் குழு புறப்பட்டுச் சென்று விட்டது.படகுத்துறைக்கு வந்த ஜெயலலிதாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. வேறு படகு எதுவும் கிடைக்கவில்லை.

அப்போது உள்ளூர்க்காரர் ஒருவர் சொன்ன யோசனைப் படி குறுக்கு வழியாகச் செல்லும் மூன்று கி.மீ கடல் பாதையில் செல்ல முடிவெடுத்தார்.

மூன்று கிலோமீற்றர் அலையடிக்கும் கடலில் நிலையற்று ஆடும் கட்டுமரத்தில் பயணம் செய்யத் துணிச்சலும் மன வலிமையும் நிறைய இருக்க வேண்டும்.

அவை இரண்டுமே ஜெயலலிதாவிடம் நிறைய இருந்தது ஜெயலலிதாவின் உடையும் ஒப்பனையும் கடல் நீர் வாரியடித்ததில் நனைந்து விட்டிருந்தன.

அத்தோடு எம் .ஜி . ஆருக்கு முன்னதாகவே ஜெ வந்து சேர்ந்து விட்டார்.அந்தத் துணிச்சல் தான் இன்று வரை அவருக்கு கை கொடுத்து வந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.

தொடரும்…

சினி­மாவில் தொடங்கி ஸ்ரீரங்­கத்து தேவ­தை­யான கதை: பெப்­ர­வரி 24 இல் பிறந்த நாள் காணும் ‘ஜெ’

Share.
Leave A Reply

Exit mobile version