ஏபிடிவில்லியர்ஸின் (AB de Villiers) அதிரடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 257 ஓட்டங்களால் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

Imran-Tahir

11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “பி” யில் இடம்பெற்ற தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஒன்றையொன்று சந்தித்தன.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன் படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இமாலய ஓட்ட எண்ணிக்கையை அடைந்து வரலாறு படைத்தது.

தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 408 ஓட்டங்களை குவித்து, உலகக் கிண்ண போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் என்ற புதிய வரலாற்றையும்  பதிவுசெய்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய வில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 66 பந்துகளில் 162 ஓட்டங்களையும் அம்லா 65 ஓட்டங்களையும் டு பிளஸிஸ் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சுகளை பதம் பார்த்த வில்லியர்ஸ், 55 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை தன் வசப்படுத்தினார். அதிவேக சதம் என்ற சாதனை 50 பந்துகளில் எட்டியமை கெவின் ஓ பிரையனிடம் உள்ளது.

அதேவேளை உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாகப் பெற்ற 150 ஓட்டங்கள் என்ற சாதனையையும் டிவில்லியர்ஸ் படைத்துள்ளார்.
ஆட்டமிழக்காது 162 ஓட்டங்களைக் குவித்து புதிய சாதனை படைத்ததுடன் உலகக் கிண்ண வரலாற்றில் தென்னாபிரிக்க அணி அதிகபட்ச ஓட்ட ங்களைப் பெற்று வரலாறு படைக்கவும் வித்திட்டார்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக பந்துவீச்சில் ரசல் மற்றும் கெய்ல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் 409 என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட்டுகளை தென்னாபிரிக்க பந்து வீச்சாளர் கள் குறி பார்த்தனர்.


தென்னாபிரிக்க பந்து வீச்சு க்கு முகங்கொடுக்கத் தடுமாறிய மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை தாரைவார்த்தனர்.

பந்து வீச்சுக்குத் தாக்குப்பிடிக்கத் தடுமாறிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று 257 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஸ்மித் 31 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஹோல்டர் தனது கன்னி அரைச்சதத்தையும் 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளையும் அப்போட் மற்றும் மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப் போட்யின் ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சுக்களை சிதறடித்த ஏபிடி வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

வேகமான 150 : தென்னாப்பிரிக்க வீரர் சாதனை

சிட்னி கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை 257 ரன்களால் தென்னாப்பிரிக்கா வெற்றியீட்டிய அதேவேளை, தென்னாப்பிரிக்க அணியின் ஏபி டெ விலர்ஸ் ஒரு நாள் போட்டிகளின் மிக வேகமான 150 ரன்களை பெற்றிருக்கிறார்.

ஏபி டெ விலர்ஸ்

சிட்னியில் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆபிரிக்கா அணி 408 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த போட்டியிலேயே, உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் அதிவேக சதம் ஒன்றை பெற்ற வீரர் என்ற பெருமையை தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர் ஏபி டெ விலர்ஸ் பெற்றிருக்கிறார். 64 பந்துகளுக்கு 150 ரன்களை குவித்து இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் படைத்திருந்த இவ்வாறான ஒரு சாதனையை 19 பந்துகளால் முறியடித்த ஏபி டெ விலர்ஸ், தென் ஆபிரிக்காவிற்கு புகழ் சேர்த்துள்ளார்.

ஏபி டெ விலர்ஸ் 66 பந்துகளுக்கு தமது சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 162 ரன்களை குவித்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அண்மை நாட்களாக தமது அபார விளையாட்டு திறமையை துடுப்பாட்டத்தில் காண்பித்து வரும் டெ வில்லர்ஸ், கடந்த மாதம் ஜொஹான்ஸ்பேர்க்கில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதே அணிக்கு எதிராக 31 பந்துகளுக்கு சதம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென் ஆபிரிக்கா பெற்ற இந்த ரன்கள் உலகக் கிண்ண வரலாற்றில் ஓர் அணி பெற்ற இரண்டாவது மிகக் கூடிய ரன்களாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version