தமிழர் பிரச்சினையை முன்வைக்கின்ற ​போது அதை இனவாதம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த தமிழ் விழா மற்றும் திருக்குறல் மாநாடு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

இரண்டாம் நாளான இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் விழா மற்றும் திருக்குறல் மாநாட்டில் கலந்துகொண்டதுடன், திருக்குறல் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து திருவள்ளுவர் உருவப்படத்திற்கு வடமாகண முதலமைச்சர் மலர் மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வு பெற்ற பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழுக்கும் திருக்குறலுக்கும் தொண்டாற்றியவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி கட்டடத்தொகுதி மற்றும் பெண்கள் வைத்திய விடுதி ஆகியன இன்று திறந்து வைக்கப்பட்டன.

வட மாகாண ஆளுனர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, ஆண்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர்கள்  பதவிக்கு   ஆசைப் படாதவர்கள், அமைச்சர் பதவிக்கா சோரம் போகாதவர்கள் என்கிறார்  கூட்டமைப்பு  பாராளுமன்ற  உறுப்பினர் பா. அரியநேந்திரன்.

கிழக்கு  மாகாண  சபையில்  முதலமைச்சர்  பதவிக்கு    ஆசைப்பட்டு, கெஞ்சிக் கூத்தாடி … அது  கிடைக்காமல் போனதால்  முஸ்லிம்  காங்கிரஸிடம்   சோரம்போய்  இரண்டு  அமைச்சு  பதவிகளை  பெற்றுக்கொண்டதை  மறைப்பதற்காகவே   பா. அரியநேந்திரன்  இப்படி  கதைவிடுகிறார்.

இந்த கதை…  அரசியல் தெரிந்த, அறிவு சார்ந்த  முக்கியமாக  கிழக்கு  மாகாணத்தில்  உள்ள  மக்களுக்கும், கூட்டமைப்பில் உள்ள  மற்றைய   கட்சியினருக்கும்  தெளிவாக  தெரியும்.

அதை…  மறைப்பதற்காக  அமைச்சர்  பதவிக்காக   தாங்கள்  “சோரம்”    போகமாட்டோம்  என    கதைவிடுகிறார்.

நல்லா  கதை சொல்லுவாங்கள். மக்களே!  இவர்கள்  சொல்லுவதை   வடிவாக  காதுகொடுத்து கேட்டுக்கொண்டு  தொடர்ச்சியாக  இவர்களுக்கு  வாக்களியுங்கள்.

அப்பதான்  அவாகள்  பதவி  பெற்றுக்கொண்டு  இன்னும் இன்னும்  உங்களுக்கு கதை சொல்லுவார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version