ஓமலூர்: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னையும் தன் காதலியையும் தாக்கிய தந்தைக்கு அதிர்ச்சிவைத்தியமாக தெருவில் அவர் கண் எதிரே தாலி கட்டினார் மகன். பாதசாரிகளே பார்வையாளர் களாக இருந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் ஓமலுரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத் (22), சேலத்தில் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

அதே கடையில், கருப்பூர் பரவைக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகள் திவ்யா(23) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது காதல், பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கோபிநாத்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

love-pair-omalur1இதனால் செய்வதறியாது அதிர்ச்சியடைந்த கோபிநாத், திவ்யாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். கடை வீதிக்கு சென்ற கோபிநாத், புது தாலிக்கயிறு வாங்கி, அதே இடத்தில் மனைவியின் கழுத்தில் மீண்டும் கட்டினார். அப்போது அந்த வழியே நடந்துசென்றவர்கள் நடு வீதியில் நடந்த இந்த திருமணத்தை ஆச்சர்யமாக பார்த்தபடி சென்றதோடு மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அவர்களை விடாமல் பின்தொடர்ந்து துரத்தி வந்த பழனிசாமி, அதைக் கண்டு அதிர்ச்சியாகி ஆத்திரத்தில் திவ்யாவின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்தார். இதனால் கடைவீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் போலீசார், உடனடியாக அங்கு விரைந்து சென்று, காதல் ஜோடியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவீட்டாரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என எழுத்துப் பூர்வ உறுதிமொழி வாங்கினர். பின்னர் திவ்யாவை, கோபிநாத்துடன் அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் சினிமா காட்சிகள் போல அரங்கேறிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version