13ஆவது திருத்­தச்­சட்­டத்தை இந்­தி­யாவே எமக்கு அளித்­தி­ருக்­கின்­றது. அதில் குறை­பா­டுகள் காணப்­படும் பட்­சத்தில் அதனை திருத்­தி­ய­மைத்து முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டிய   தார்­மீகப் பொறுப்பும் அவர்­க­ளுக்கு உள்­ளது.

அதனை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யிடம் வலி­யு­றுத்­த­வுள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால தமிழ் மக்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் எந்­த­வி­த­மான கருத்­துக்­களையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை எனக் குறிப்­பிட்­ட,  அவர் காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கருத்­துக்கள் மன­வே­த­னையை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கொழும்­பி­லுள்ள   முத­ல­மைச்­சரின் இல்­லத்தில் சம­கால நிலை­மைகள் தொடர்­பாக   வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

கேள்வி:- இந்­தியப் பிரமர் நரேந்­தி­ர­மோடி இந்த வாரத்தில் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­துடன் வட­மா­கா­ணத்­திற்கு வரு­கை­த­ர­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அவ­ரு­டைய சந்­திப்­பின்­போது எவ்­வா­றான விட­யங்­களை முன்­வைக்­க­வுள்­ளீர்கள்?

பதில்:– இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­தி­ர­மோடி வட­மா­கா­ணத்­திற்கு வரு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. நாங்கள் வட­மா­கா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம்.

அகவே நாமும் எமது மக்­களும் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை, குறை­பா­டு­களை அவரின் கவ­னத்­திற்குச் கொண்டு செல்வோம். குறிப்­பாக 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு கோருவோம்.

காரணம் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை இந்­தி­யாவே எமக்கு அளித்­தி­ருக்­கின்­றது. ஆகேவே அதில் குறை­பா­டுகள் காணப்­படும் பட்­சத்தில் அதனை திருத்­தி­ய­மைத்து முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டிய தார்­மீகப் பொறுப்பும் அவர்­க­ளுக்கு உள்ளது. எனவே அது தொடர்­பி­லான விட­யங்கள் தொடர்பில் நாம் விரி­வாக பேசுவோம்.

கேள்வி:- வட­மா­கா­ண­சபை சுயா­தீ­ன­மாக இயங்­கு­வ­தற்கு முன்னர் காணப்­பட்ட ஆளுநர், பிர­தம செய­லாளர் போன்­ற­வர்கள் தடை­களை  ஏற்­ப­டுத்­து­வ­தாக பகி­ரங்­க­மாக குற்றம் சாட்­டி­யி­ருந்­தீர்கள்.

ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் தற்­போ­தைய நிலமைகள் எவ்­வா­றுள்­ளன? நிரு­வா­கத்தை முன்­னோக்கிக் கொண்டு செல்­வ­தற்­கான ஏது நிலைகள் காணப்­ப­டு­கின்­ற­னவா?

பதில்:– தற்­போது இருக்கும் நிலை­மை­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. கடந்த சனிக்­கி­ழமை கூட நான் முல்­லைத்­தீ­வுக்குச் சென்­ற­போது தற்­போ­தைய ஆள­ந­ருடன் இணைந்தே சென்­றி­ருந்தேன்.

ஆரம்­பத்தில் எமக்கு காணப்­பட்ட அதி­கா­ரங்­களை முன்னாள் ஆளுநர் தனது கைகளில் எடுத்துச் செயற்­பட்டார். ஆனால் தற்போ­தைய ஆளுநர் எமது செயற்­பா­டு­க­ளுக்கு பக்­கத்­து­ணை­யாக காணப்­ப­டு­வ­துடன் எந்­த­வி­த­மான தலை­யீ­டு­க­ளையும் மேற்­கொள்­ள­தி­ருக்­கின்றார்.

அந்­த­வ­கையில் உறவு சுமூ­க­மாக அமைந்­துள்­ளது. இருப்­பினும் எந்­த­ள­விற்கு எமக்­கான முழு­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு கிடைக்கும். எந்­த­ள­வுக்கு முழுமை அடை­யப்­போ­கின்றோம் என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:- அண்­மையில் வடக்கு விஜயம் செய்த புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வு­ட­னான சந்­திப்பு ஆக்­க­பூர்­வ­மாக காணப்பட்­டதா?

பதில்:- ஆம். அவ­ரு­ட­னான சந்­திப்பு மிகவும் ஆக்­க­பூர்­வ­மாக அமைந்­தது. எந்­த­வொரு தரு­ணத்­திலும் தமிழ் மக்­களின் மனதை நோக­டிக்கும் வகையில் எந்­த­வொரு சொல்­லையும் அவர் கூற­வில்லை.

அதற்கு மாறாக நண்பர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் செயற்­பாடு அமைந்­தி­ருக்­கின்­றது. முதலில் தன்­னு­டைய மரு­ம­கனை வடக்­கிற்கு அனுப்­பினர். அவர் இர­ணுவ முகாம்­களை அகற்­றப்­போ­வ­தில்லை எனக் கூறினார்.

அதன் பின்னர் காண­மல்­போனோர் விட­யத்தில் தற்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளைத்­த­விர எவ­ருமே முகாம்­களில் இல்லை.

விடு­த­லைப்­பு­லி­களே கொலை செய்­தி­ருக்க வேண்டும் என தமிழ் மக்­களின் மனத்தை நோக­டிக்கும் வகையில் கருத்­துக்­களை வௌிப்­ப­டத்­தி­யி­ருக்­கின்றார்.

காணாமல் போன­வர்கள் தொடர்ச்­சி­யாக தமது உற­வு­களை கேட்டு கத­றிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அனை­வ­ருக்கும் முன்­னி­லை­யி­லேயே பலர் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளாகள். அதற்­கான பல சாட்­சி­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

அவ்­வா­றிக்­கையில் அது­போன்ற சம்­ப­வங்கள் எது­வுமே நடை­பெ­ற­வில்லை. புலி­களே கொலை செய்­தி­ருக்­க­வேண்டும் எனக் கூறி­யி­ருப்­ப­தா­னது மிகுந்த மன­வே­த­னையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. மேலும் அவ­ருக்­கு­ரிய பதிலை விரைவில் வழங்குவேன்.

கேள்வி:– வட­மா­காண சபையில் இனப்­ப­டு­கொலை தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டமை மத்­திய அர­சாங்­கத்­தி­னுள்ளும், தென்­னி­லங்­கை­யிலும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது? அத்­துடன் இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தற்கும் ஏது­நி­லை­களை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- இன­வா­தத்தை முன்­னெ­டுப்­பார்கள் என்­ப­தற்­காக நாம் உண்­மையை கூறாமல் இருக்­க­மு­டி­யாது. நாம் பிரே­ர­ணையில் கூறப்­பட்­டுள்ள அத்­தனை விட­யங்­களும் உண்­மை­யா­னவை.

அதில் எந்­த­வொறு மாற்­றமோ, பொய்­மையோ இல்லை. ஏனெனில் வௌிநாட்டு ஸ்தாப­னங்கள் தாங்­க­ளாக நபர்களிடமிருந்து சாட்­சி­யங்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட தக­வல்­களின் பிர­காரம் தயா­ரித்த அறிக்­கை­யி­லி­ருந்தே பிரேரணையில் உள்­ள­டக்­கப்­பட்ட விட­யங்கள் காணப்­டு­கின்­றன.

இது­வ­ரை­கா­லமும் தமி­ழர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற பிரச்­சி­னை­களால், கஷ்­டங்­களால் எமது வாழ்க்கை எந்­த­வி­த­மான சூழலுக்கு வந்­துள்­ளது என்­ப­தற்­கான சகல விப­ரங்­க­ளையும் உள்­ள­டக்கி இந்த பிரே­ர­ணையை நாம் நிறைவேற்றிருயிருகின்றோம்.

நல்­லி­ணக்­கத்தை உண்­மை­யி­லேயே ஏற்­ப­டுத்த விரும்­பு­கின்­றார்கள் என்றால் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முன்­ன­தாக எமக்குள் காணப்­படும் முரண்­பா­டு­களை அறிந்­து­கொள்­வது அவ­சியம். எமக்கு என்ன நடந்­தது என்­பதை அவர்கள் தெரிந்து கொள்­ள­வேண்டும்.

ஆகவே எமக்கு நடந்த விடங்­களை சிங்­கள மக்­க­ளுக்கும், வௌிநாட்­வர்­க­ளுக்கும் அறி­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையே அதுவாகும்.

குறிப்­பாக இப்­பி­ரே­ரணை மிக­முக்­கி­ன­மான ஆவ­ண­மாகும். அந்த ஆவ­ணத்தை அவர்கள் புரிந்து கொள்­வேண்டும். அந்த ஆவ­ன­மில்­லாது நாம் நல்­லெண்­ணத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது.

அந்த ஆவ­ணத்தில் கூறப்­பட்ட தன் பிர­காரம்   சில விட­யங்கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. அதனை அவர்கள் ஏற்­றுக்­கொள்வார்­க­ளாயின் நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய அடுத்த கட்­டத்­திற்குச் செல்­ல­மு­டியும். இரு­த­ரப்­புமே எத­னை­யுமே மேற்கொள்­ளாது நல்­லி­ணக்கம் பற்றி பேசு­வதில் அர்த்­த­மில்லை.

கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் அவ்­வா­றான விட­யங்கள் உள்ளடக்கப்பட்டி­ருந்­தன.

இருப்­பினும் அது கிடப்­பி­லேயே உள்­ளது. ஆனவே தமிழ்­மக்­களின் இன்­னல்­களை எடுத்­துக்­கூறும் சரித்­திர ரீதி­யான ஆவ­ண­மாகும். அதனை இன­வா­தத்­துடன் பார்ப்­ப­தற்கு அப்பால் அது­வொரு சட்ட ரீதி­யான உரு­வாக்­கப்­பட்­தொன்­றாகும்.

ஆகவே அந்­தப்­பி­ரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதால் மீண்டும் இன­வாத அர­சியல் மேற்­கொள்­ளப்­பட்டு முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வருவார் அல்­லது வாக்­கு­களை மேற்­கொள்வார் என நான் கரு­த­வில்லை. வெறு­மனே அவையனத்தும் பூச்­சாண்டி காட்டும் செய­லாகும்.

கேள்வி:வட­மா­காண சபையின் முத­ல­மைச்சர் அபேட்­ச­க­ராக உங்­களின் பெயர் பிரே­ரிக்­கப்­பட்­ட­போது விடுதலைப்  புலிகளின் தலைவர் பிர­பா­க­ரனை விட நீங்கள் ஆபத்­தா­னவர் என தென்­னி­லங்­கையில் பிர­சாரம் செய்­யப்­பட்­டது.

தற்­போது பிரே­ரணை நிறை­வேற்­றத்தின் பின்­னரும் அதே­நி­லைமை உரு­வெ­டுத்­துள்­ளதே?

பதில்:- நாம் வௌிப்­ப­டைத்­தன்­மை­யாக எடுத்த சில நட­வ­டிக்­கை­களை வைத்து ஆபத்­தான நிலை காணப்­ப­டு­கின்­ற­னது என அவர்கள் கூறு­வ­தற்கு கார­ணங்­க­ளாக அமைந்­தி­ருக்­கலாம்.

அத்­தோடு நாம் வேறு எத­னையோ மேற்­கொள்­ளப்­போ­வ­தாக எண்­ணி­யி­ருக்­கலாம். அதற்­கா­கவே எம்மை கடந்த வருடம் முழு­வதும் செயற்­ப­டு­வ­தற்கு வழி­வி­டாது வைத்­தி­ருந்­தார்கள்.

எவ்­வ­ரா­றா­யினும் நாம் சட்­டத்­திற்கு உட்­பட்டு உண்­மைக்கு புறம்­பாக இல்­லாது எமது நட­வ­டிக்­கைளை மேற்­கொண்டு வருகின்றோம். எந்த விதத்­திலும் நாம் நாட்டைப் பிரிக்­க­வேண்டும் எனக் கூற­வில்லை.

நாட்டைப் பிரிக்­காது எமது தனித்­து­வத்தை பேணக்­கூ­டிய வகையில் ஆகக் கூடிய அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­க­வேண்டும் என்­பதே எமது கோரிக்கை. அதனை அடிப்­ப­டை­யாக வைத்தே எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அவ்வாறிருக்கையில் எலும்­பற்ற நாக்கால் எவரும் எத­னையும் கூறலாம்.

கேள்வி:- இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்பதை கூட்டமைப்பும் வடமாகாண சபையும் வலியுறுத்தியுள்ள நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் உள்ளக விசாரணையொன்றே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுத்துள்ளனவே?

பதில்:- கடந்த காலச் செயற்பாடுகளின் அடிப்படையில் உள்ளக விசாரணையால் எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கமாட்டாது என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்களும் இல்லை. முரண்பாடுகளும் இல்லை.
சர்வதேச சமுகம் அது தொடர்பில் நடவடிக்கைளை முன்னெடுக்குமாயின் அது தொடர்பிலான நிபுணர்கள் வரவழைக்கப்படவேண்டும் என்பதை நாம் கோரவேண்டியிருக்கும்.

உள்ளுரில் விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமாயின் அதனை நெறிப்படுத்துவதற்கு முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதி கிறிஸ்தோபர் விரமந்திரியை தவிர வேறு ஒருவரும் இலங்கையில் இல்லை.

ஆனாலும் அவரின் முதுமை தற்போது அப்பணிகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்குமா என்பது கேள்விக்குறி. அந்நிலையில் அவ்வாறான செயற்பாடுகளை உள்ளக ரீதியில் முன்னெடுப்பதற்கு எவருமே இல்லை.

நீதியானவர்கள் இல்லை. ஏதோவொரு வகையில் பக்கச்சார்பாக நடக்க கூடியவர்களே உள்ளார்கள். எனவே பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு வௌிநாட்டு நிபுணர்களின் உதவி மிகமிக அவசியம்.

Share.
Leave A Reply

Exit mobile version