மட்டக்களப்பு மாவட்டத்தில் முச்சக்கர வண்டி செலுத்தி வருமானத்தை ஈட்டிவருபவர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குள் அடங்கும் மாமாங்கம் கிராமத்தில் வசிக்கும் எஸ்.றொமீலா (வயது 35) என்ற இருபிள்ளைகளின் தாயாராவார்.
கடங்த மூன்று வருடங்களாக முச்சக்கர வண்டி சாரதியாக செயற்படும் இவர் இதன் மூலமே வருமானத்தை தேடிவருகின்றார்.
கடைகளில் வேலை பார்ப்பதை விட, வெளிநாடு செல்வதை விட இத்தொழில் சுயகௌரவத்துடன் உழைக்கக்கூடியதாகவும் பெண்களாலும் முடியும் என்பதை காட்டுவதாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தன்னைப்போல மட்டக்களர்பு பிரதேசத்தில் 15 பெண்கள் முச்சக்கர வண்டி செலுத்தும் பயிற்சியை முடித்துள்ளதாகவும் தங்களுக்காக முச்சக்கர வண்டி பெண்கள் அமைப்பொன்றை உருவாக்கி தங்களுக்கான தரிப்பிடத்தையும் உருவாக்கி தருமாறு சர்வதேச பெண்கள் தினத்தில் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித் தார்.
விபத்தில் மாணவி பலியானதால் வான் தீக்கிரையானது!
நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நி.ஜசோ (12வயது) பாடசாலை வீதி, மாவடிவேம்பு பகுதியில் உள்ள மாணவியே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று இருந்து குருணாகலுக்கு சென்றுக்கொண்டிருந்த வான் தனியார் வகுப்பு சென்றுவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த மாணவி மீது மோதியுள்ளது.
இதன்போது குறித்த மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இதனால் ஆத்திரமுற்ற பிரதேச மக்கள் வான் சாரதியை தாக்கியதுடன் வானையும் தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்துக்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாரதியை கைதுசெய்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.