”இந்த அடி உனக்குப் பாடம் புகட்டும்” எனும் ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். அதற்குப் பின்பு, கேமரா அந்த ரத்தம் ஒழுகுபவனின் முகத்திலிருந்து நகர, சில நொடிகள் அவனது அலறல் சத்தம் மட்டும் கேட்டபடியே இருக்கிறது.
இணையத்தில் அதிவேகமாக பரவி வரும் இந்த வீடியோவில் உயிருக்கு போராடுபவன் பிரேசிலின் கோயியாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது வாலிபன், அவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர் ஒரு 11 வயது பெண்ணின் தந்தை.
அந்த வாலிபன் 3 மாதங்களுக்கும் மேலாக சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் அந்த 11 வயதுப் பெண்ணிடம் பேசியுள்ளான். ஆனால் அவன் பேசிக் கொண்டிருந்ததோ அந்தப் பெண்ணின் தந்தையிடம்.
அவனது நாடத்தையால் ஆத்திரமடைந்த அந்த தந்தை அந்த வாலிபனை மூர்க்கத்தனமாக அடித்து அதை தனது கேமராவில் பதிவு செய்து, இணையத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார்.
மூன்று நாள் கழித்து பிரஷ்லேண்ட் என்ற இடத்தின் அருகே அந்த வாலிபன் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இங்கிலாந்து களமிறங்கியது. டாசில் வென்ற அந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதிர்ச்சி தொடக்கம்: வங்கதேச இன்னிங்சை தமிம் இக்பால், இம்ருல் கேயஸ் தொடங்கினர். இருவரும் தலா 2 ரன் மட்டுமே எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 8 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், சவும்யா சர்கார் மகமதுல்லா ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் இணைந்து 86 ரன் சேர்த்தனர்.
சர்கார் 40 ரன் எடுத்து (52 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அதிரடி ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 2 ரன் எடுத்து மொயீன் அலி சுழலில் ரூட் வசம் பிடிபட்டார். வங்கதேசம் 94 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்து 99 ரன்னுக்கு 4 விக்கெட் என மீண்டும் சரிவை சந்தித்தது. வங்கதேச அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டிவிடலாம் என்ற முனைப்புடன் இங்கிலாந்து தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஆனால், மகமதுல்லா முஷ்பிகுர் ரகிம் ஜோடி 5வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி ரன் சேர்த்தது. இவர்களைப் பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.
முதல் சதம்: அபாரமாக விளையாடிய மகமதுல்லா, உலக கோப்பையில் சதம் விளாசிய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 103 ரன் எடுத்து (138 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் அவுட் ஆனார். மகமதுல்லா முஷ்பிகுர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 141 ரன் சேர்த்து அசத்தியது. முஷ்பிகுர் ரகிம் 89 ரன் எடுத்து (77 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) பிராடு வேகத்தில் ஜோர்டான் வசம் பிடிபட்டார். சபிர் ரகுமான் 14 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன் குவித்தது. கேப்டன் மோர்டசா 6, அராபத் சன்னி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், ஜோர்டான் தலா 2, பிராடு, மொயீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 276 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
மொயீன் அலி, இயான் பெல் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 43 ரன் சேர்த்தது. மொயீன் 19 ரன் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அடுத்து பெல் ஹேல்ஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. ஹேல்ஸ் 27 ரன்னில் வெளியேற, நிதானமாக விளையாடிய பெல் அரை சதம் அடித்தார். அவர் 63 ரன் எடுத்து (82 பந்து, 7 பவுண்டரி) ருபெல் வேகத்தில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் வசம் பிடிபட்டார்.
திடீர் சரிவு: அடுத்து வந்த கேப்டன் மார்கன் (0), ஜேம்ஸ் டெய்லர் (1) இருவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் என்ற வலுவான நிலையில் இருந்து 132 ரன்னுக்கு 5 விக்கெட் என இங்கிலாந்து தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த ஜோ ரூட் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 35.4 ஓவரில் 163 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்த இங்கிலாந்து அணிக்கு பட்லர் வோக்ஸ் ஜோடி உயிர் கொடுத்தது.
இருவரும் அதிரடியாக ரன் சேர்க்க, இங்கிலாந்து கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நெருங்கியது. பட்லர் 41 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். வங்கதேச வீரர்கள் பதற்றத்தில் சில கேட்ச் வாய்ப்புகளை வீணடித்ததும் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தது. அந்த அணி வெற்றியை வசப்படுத்திவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்லர் 65 ரன் எடுத்து (52 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) தஸ்கின் அகமது பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஜோர்டான், தான் சந்தித்த முதல் பந்திலேயே பரிதாபமாக ரன் அவுட் ஆனார். அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்ந்ததால், வங்கதேச வீரர்கள் உற்சாகமடைந்தனர். எனினும், வோக்ஸ் மனம் தளராமல் போராடியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. கை வசம் 2 விக்கெட் இருக்க, கடைசி 2 ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 16 ரன் மட்டுமே தேவைக்கப்பட்டது.
ருபெல் உசேன் வீசிய 49வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டூவர்ட் பிராடு (9), 3வது பந்தில் ஆண்டர்சன் (0) கிளீன் போல்டாகி ஆட்டமிழக்க, வங்கதேச அணி 15 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இங்கிலாந்து 48.3 ஓவரில் 260 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வோக்ஸ் 42 ரன் எடுத்து (40 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பந்துவீச்சில் ருபெல் உசேன் 4, மோர்டசா, தஸ்கின் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அபாரமாக விளையாடி சதம் விளாசிய வங்கதேச வீரர் மகமதுல்லா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அணி 5 போட்டியில் 4வது தோல்வியுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்து பரிதாபமாக வெளியேறியது.
அதிபட்ச ஸ்கோர்:
வங்கதேச அணி நேற்று எடுத்த 275 ரன், ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக, மிர்பூரில் நடந்த போட்டியில் (2010) 260 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.