லக்னோ: உத்தர பிரதேசத்தில் எளிமையான கணக்கிற்கு விடை காண முடியாத மணமகனை ஏற்க மறுத்து மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ளது ரசூலாபாத் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த மோஹர் சிங் என்பவரின் மகளுக்கும் ராஜ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ராஜ் நன்கு படித்தவர் என பெண் வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை திருமணம் நடக்க வேண்டி இருந்தது. தாலி கட்டும் முன்பு மணப்பெண் ராஜிடம் பதினைந்துடன் ஆறை கூட்டினால் எத்தனை என்ற எளிய கணக்கிற்கு விடை கேட்டார்.

ராஜ் விடை தெரியாமல் விழித்தார். இதை பார்த்த மணப்பெண் எளிய கணக்கிற்கு விடை தெரியாத இவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்து மண்டபத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

மண்டபத்திற்கு திரும்பி வருமாறு எவ்வளவோ கூறியும் மணமகள் வரவில்லை. இதையடுத்து திருமணம் நின்றது.

இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றது. போலீசார் வந்து இரண்டு வீட்டாரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து இருவீட்டாரும் சமாதானம் ஆகிச் சென்றனர். முன்னதாக உத்தர பிரதேசத்தில் வலிப்பு உள்ளவர் அதை மறைத்து திருமணம் செய்ய முயன்றார்.

ஆனால் திருமணத்தன்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் திரும்பி வந்தபோது மணமகள் திருமணத்திற்கு வந்திருந்த ஒருவரை மணந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

l

Share.
Leave A Reply

Exit mobile version