யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவுடன் மதிய போசன விருத்தில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாச்சார முறைபடி, பால் காய்ச்சி வீடுகளை கையளித்தார்.

அப்போது, ஒவ்வொரு வீடாக சென்ற மோடி, அங்கிருந்த தமிழர்களிடம் பேசினார். அவர்கள் தங்கள் குறைகளை அப்போது மோடியிடம் கூறினர். இதனை மோடி கவனமாக கேட்டதோடு, உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும் அங்கிருந்த குழந்தைகளின் கன்னத்தை கிள்ளிய மோடி, அவர்களிடம் கைகுலுக்கிக் கொண்டார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version