இந்தப் படத்தில் உள்ள பாட்டியைத் தெரிகிறதா… யெஸ்.. ராகவா லாரன்ஸ்தான்.காஞ்சனா 2 படத்தில் அவர் போடும் கெட்டப்புகளில் இந்த சூனியப் பாட்டி வேடமும் ஒன்று. வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள காஞ்சனா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்த நாளே அந்தப் படத்தின் இன்னொரு ஸ்டில் வெளியானது. அதில் ராகவா லாரன்ஸ் மிக வித்தியாசமாக ஒரு சூனியக்கார கிழவி மாதிரி வேடத்தில் தோன்றி மிரட்டுகிறார்.

 

இந்த போட்டோதான் இப்போது சமூக வலைத் தளங்களில் பரபரவென பரவிக் கொண்டுள்ளது. காஞ்சனா படத்தில் நான்கு வேடங்களில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.அவருக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் அட்சலி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்.

தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் படத்துக்கு வியாபாரம் பேசப்பட்டு வருகிறது.

காஞ்சனா 2… லாரன்ஸ் ‘பேயி’ன் ஃபர்ஸ்ட் லுக் பாக்கறீயளா..?
16-03-2015
ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படம் செம த்ரில்லிங் என்றாலும், அன்றைக்கு எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை.ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தொடர்ச்சி என்ற பெயரில் இயக்கி வெளியிட்ட காஞ்சனா, சக்கைப் போடு போட்டது. பேய்ப் பட வரிசையில் அந்தப் படம் புது ட்ரெண்டை உருவாக்கியது என்றாலும் மிகையல்ல. இப்போது காஞ்சனாவின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் லாரன்ஸ்.

14-1426316424-raghava-lawrence-s1s-600

முனி 3 அல்ல…
இந்தப் படத்துக்கு முதலில் முனி 3 என்றுதான் பெயரிட்டிருந்தனர். பின்னர் அந்தப் பெயரை காஞ்சனா 2 என்று மாற்றிவிட்டதாக லாரன்ஸ் அறிவித்தார்.
முதல் தோற்றப் போஸ்டர்கள்
இப்போது படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. உடம்பு முழுக்க மஞ்சள் பூசி, நெற்றியில் திருநீற்றுப் பட்டை தீட்டி ஆக்ரோஷப் பார்வையுடன் காட்சி தருகிறார் லாரன்ஸ் ‘பேய்’.
கோவை சரளா
முனியின் தொடர்ச்சிதான் காஞ்சனா, காஞ்சனா 2 என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், இந்த மூன்று படங்களின் கதைகள் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாதவையே. லாரன்ஸ் பயந்தாங்கொள்ளி, அவரைப் பேய் பிடிக்கும், அவருக்கு அம்மா கோவை சரளா ஆகிய மூன்று விஷயங்கள் மட்டும்தான் இந்த மூன்று கதைகளிலும் தொடர்ச்சியாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் – தேனாண்டாள்
இந்தப் படத்தை ராம நாராயணனின் மகன் தனது தேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் வெளியிடுகிறார். சன் பிக்சர்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை வழங்குகிறது.
Share.
Leave A Reply

Exit mobile version