ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அவரின் காதலி எனக் கூறப்படும் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபெயோவா மூலம் குழந்தை பிறந்துள்ளதாக உலகின் பல நாடுகளின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இவை முற்றிலும் வதந்திகள் என ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார்.
இவர்கள் ஏற்கெனவே ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் பின்னர் சிலர் தெரிவித்தனர்.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தான் அலினா கபெயேவாவை திருமணம் செய்ததாக கூறப்படுவதை ஏற்கெனவே நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், சுவிட்ஸர்லாந்திலுள்ள வைத்தியசாலையில், அலினா கபெயோவாவுக்கு குழந்தையொன்று பிறந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகையொன்று கடந்த வாரம் செய்திவெளியிட்டது.
ஆனால், அவருக்கு குழந்தை பிறந்துள்ளது என மாத்திரமல்லாமல் அது விளாடிமிர் புட்டின் மூலம் பிறந்த குழந்தை எனவும் வதந்திகள் பரவியுள்ளன.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த 10 நாட்களாக ரஷ்யாவில் பகிரங்கமாக காணப்படாதமையும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்துள்ளன.
எவ்வாறெனினும் மொஸ்கோ நகரில் இன்று நடைபெறவுள்ள கூட்டமொன்றில் விளாடிமிர் புட்டின் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது அவர் குறித்து புதிய தகவல்கள் உண்மையா என்பதற்கும் அவர் பதிலளிக்கக்கூடும்.