எப்படி சினிமா வாய்ப்பு?
என்ன படிச்சுருக்கீங்க? உங்க குடும்பம் பத்தி சொல்லுங்களேன்…
சொந்த ஊரு தூத்துக்குடிப்பா. படிச்சது பத்தாவது. அப்பா பெரிய ஸ்டன்ட் மாஸ்டர். பெரியண்ணன் ஸ்டன்ட் மாஸ்டரு . நமக்கும் வேலையில்லாம அப்படியே ஸ்டன்ட்டுக்குள்ள வந்துட்டேன். இப்பவும் தமிழ், தெலுங்கு, இப்படி பல மொழிகள்ல ஸ்டன்ட் மாஸ்டரா இருக்கேன். நடிப்பு தமிழ்ல மட்டும்தான்.
எப்படி நான் கடவுள் பட வாய்ப்பு கிடச்சது?
’பிதாமகன்’ படத்துல ஸ்டன்ட் மேனா வேலை செய்யும்போதே என்னை பாலா சாருக்குத் தெரியும். ’நான் கடவுள்’ படத்துல ஒரு ஃபைட் சீன் இருக்கு பண்றியான்னு கேட்டாரு.
அவ்ளோ பெரிய டைரக்டரு நம்மள கேட்டதே பெரிய விஷயம்ப்பா. அப்பறம் என்னோட மொட்டத் தல, லுக்கெல்லாம் பாத்துட்டு நீ வில்லன்னா பண்ணுன்னாரு பண்ணேன்ப்பா. என்னால மறக்க முடியாத படம் . நெறைய கத்துக்கிட்டேன்.
அவ்ளோ பெரிய வில்லனா இருந்துட்டு , எப்படிஜி காமெடி சப்ஜெக்ட்?
தலதளபதின்னு சொன்னோனதான் ஞாபகம் வருது, அதிகமா அவுங்க ரெண்டு பேரோட மாஸ் டயலாக்குகள படங்கள்ல பயன்படுத்துறீங்களே? எதாவது திட்டமா?
அய்யய்யோ… அதெல்லாம் இல்ல. டைரக்டர்கள் நான் இந்த டயலாக் பேசினா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க. நானும் அவங்க சொல்றத செய்யறேன்… அவ்ளோதான்!
உண்மையைச் சொல்லணும்னா டைரக்டர்கள்லாம் எனக்கு நல்ல நல்ல கேரக்டர்கள் தராங்க. அதுலேயும் அட்லீ சார் கொடுத்த ’ராஜா ராணி படமெல்லாம் எனக்கு முக்கியமான படம்.
விஜய் , அஜித் சார்பா உங்கள யாராவது பாராட்டியிருக்காங்களா?
அவ்ளோ பெரிசா இன்னும் நான் ஏதும் பண்ணலப்பா. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துட்டு இருக்கேன். யாராவது பாராட்டினா கண்டிப்பா உங்களுக்கு போன் போட்டு சொல்றேன்.
விஜய் , அஜித் ஒரே நேரத்துல ரெண்டு பேர் படத்துலயும் சான்ஸ், ஆனா ஒரு படத்துலதான் நடிக்கணும் என்ன செய்வீங்க?
ரொம்ப சிக்கலான கேள்விப்பா, நடிச்சா தலதளபதி ரெண்டு பேர் கூடவும் ஒரே டைம்ல தான் நடிக்கணும். என்ன நான் சொல்றது. உங்களுக்கு 5000 இன்க்ரீமெண்டுப்பா. நான் கொஞ்சம் பிஸிப்பா… வரட்டுமா..
என்றவரிடம் வாழ்த்துகள் கூறிவிட்டு விடைபெற்றோம்.