யாழ்ப்பாணம் ஏழாலையில் பள்ளிக்கூட நீர்த்தாங்கியில் தண்ணீர் குடித்த 27 மாணவர்கள் சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழாலை சிறி முருகன் வித்தியாலயத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

பள்ளிக்கூட பிள்ளைகள் தண்ணீர் குடிக்கும் நீர்த்தொட்டியில் இரு விஷ குப்பிகளை கண்டெடுத்ததாக பள்ளிக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

students

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, பள்ளிக்கூட பழைய மாணவர்களும் பெற்றோரும் அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயக்கமடைந்த 27 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version