உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்காவில் பிறந்த எலியட்டின் அதிரடியால் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

உலகக் கிண்ணத் தொடரின் இன்று முதலாவது அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து-தென்னாபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா துமலில் துடுப்பெடுத்தாடியது.

தென்னாபிரிக்கா முதலில் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. தென்னாபிரிக்கா  30.3-வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மாத்திரம் எடுத்திருந்தது.

1st-Semifinal-New-Zealand-vs-South-Africa டி வில்லியர்ஸ் 9 ஓட்டங்களுடனும், டுபிளிஸ்சிஸ் 50 ஓட்டங்களுடனும் விளையாடினர். டிவில்லியர்ஸ் இறங்கியதும், விளையாட்டு விறுவிறுப்பை எட்டியது. பந்துவீச்சில் அச்சுறுத்திய நியூசிலாந்தை டிவில்லியர்ஸ் அதட்டினார்.

ஆனால் தென்னாபிரிக்காவின் எழுச்சியில் மழை குறுக்கிட்டது. தென்னாபிரிக்கா 38 ஓவர் விளையாடி இருந்த நிலையில் மழைபெய்தது. மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தென்னாபிரிக்கா  38 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து 216 ஓட்டங்களை எடுத்து இருந்தது. மழை நியூசிலாந்து அணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தது.

மழை நின்ற பின்னர் ஓவர்கள் 43 குறைக்கப்பட்டது. தென்னாபிரிக்கா வீரர் மில்லர் அதிரடி காட்டினார். டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் இறுதி கட்டத்தில் அபாரம் காட்டியதால் தென்னாபிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்களகளை எட்டியது.

இதனையடுத்து நியூசிலாந்து அணி 43 ஓவர்களுக்கு 298 ஓட்டங்களை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

நியூசிலாந்து அணிக்கு மெக்கல்லம் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். மெக்கல்லம் 26 பந்துகளில், 59 ஓட்டங்களை(8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் குப்திலும் அபாரம் காட்டினார். 34 ஓட்டங்களுடன் குப்தில் ஆட்டிழந்தார்.

 இதனையடுத்து தென்னாபிரிக்கா கை வெகுவாக ஓங்கியது. நியூசிலாந்தின் ஆதிக்கத்தை தடுக்கும் விதமாக 4 விக்கெட்களை கைப்பற்றியது. ஆனால் எலியட்டின் விக்கெட்டை மட்டும் எடுக்க தென்னாபிரிக்கா தவறிவிட்டது.

நல்ல வாய்ப்புகளையும் தென்னாபிரிக்கா நழுவவிட்டது. எலியட் கடைசி வரையில் அதிரடியாக ஆடி 84 ஓட்டங்களை குவித்தார். இறுதியில் நியூசிலாந்து 42.5 ஓவர்களிலே 299 ஓட்டங்களை எடுத்து, தென்னாபிரிக்காவின் இலக்கை தகர்த்தது.

நியூசிலாந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இரு அணிகளும் சமபலத்துடன் இருந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு களைகட்டியது. கடைசியில் 2 ஓவர்களுக்கு 5 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், தென்னாபிரிக்காவிற்கு இருந்த நம்பிக்கையை, தென்னாபிரிக்காவில் பிறந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடிய எலியட் தகர்த்தார். கடைசி பந்தில் சிக்சர் அடித்து நியூசிலாந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க செய்தார்.
தென்னாபிரிக்கா , நியூசிலாந்து அணிகள் இடையே இரண்டு ஒற்றுமை இருந்து வருகிறது. இரு அணிகளுமே கிண்ணத்தை வென்றது கிடையாது.

அத்துடன் இரு அணிகளுக்கும் இதுவரை இறுதிப்போட்டி எட்டாக் கனியாகவே இருந்துவந்தது. தற்போது நியூசிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. ஆனால் தென்னாபிரிக்காவிற்கு தான் சோகம் தொடருகிறது. இந்த முறையும் தோல்வி அடைந்து வெளியேறியது.

நியூசிலாந்து அணி 7-வது முறையாக அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 1975, 1979, 1992, 1999, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதியுடன் நியூசிலாந்து அணியின் கிண்ண கனவு கலைந்து இருக்கிறது.

23 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் நடைபெறும் அரை இறுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென்னாபிரிக்கா  அணி 4-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தது.

1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதியில் தென்னாபிரிக்கா அணி துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது.

இந்த முறையும் தோல்வியையே தழுவியது. பெரும் போராட்டத்திற்கு பின்னர் தோல்வியடைந்த தென்னாபிரிக்கா வீரர்கள் அழுந்துவிட்டனர்.

நியூசிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியிலும், தென்னாபிரிக்கா வீரர்கள், ரசிகர்கள் மீண்டும் சோகத்துடனும் அழுதுவிட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version