முன்னாள் ஜனாதிபதியின் கையெழுத்து மற்றும் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட காணி உறுதிகளே, யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 190 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில்   செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன.

அந்த காணி உறுதிப்பத்திரங்களில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு ஜனாதிபதி என்பதன் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்து இட்டுள்ளார். கையெழுத்திட்ட திகதி 2015 ஜனவரி 6ஆம் திகதி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், காணி பதிவாளரின் கையெழுத்தில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இடப்பட்டுள்ளது.

காணி உறுதியின் பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் போது, அவை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

article_1427193846-IMG0482 copie

Share.
Leave A Reply

Exit mobile version