62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்பட உலகின் அறிமுக இயக்குநர் பிரம்மாவின் ‘குற்றம் கடிதல்’, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா உறுதுணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். ‘சைவம்’ படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. ‘ஜிகர்தண்டா’ எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான ‘காக்கா முட்டை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் ‘சைவம்’ படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.

சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.

முக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத போதிலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்து தற்போது தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

24-1427199564-kangana-ranavat-s1-600கன்னட படமான ‘நான் அவனல்ல அவளு’வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். ‘குயின்’ படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த ‘மேரிகோம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் ‘கோர்ட்’ சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது

தேசிய விருதுக்கு தேர்வான படங்கள் / கலைஞர்களின் முழு விவரம்:சிறந்த படம் – கோர்ட் (மராத்தி)

சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (குயின்)

சிறந்த இந்தி படம் – குயின்

சிறந்த நடிகர் – கன்னட நடிகர் விஜய் (நானு அவனல்ல அவளு)

சிறந்த துணை நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த இயக்குனர் – ஸ்ரீஜித் முகர்ஜி (சோட்டோஜ் கோனே – பெங்காலி)

சிறந்த பொழுதுபோக்கு படம் – மேரிகோம் (இந்தி)

சிறந்த இசையமைப்பாளர் – விஷால் பரத்வாஜ் (ஹைடர்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – கோபி சுந்தர் (1983-மலையாளம்)

சிறந்த பின்னணி பாடகர் – சுக்வீந்தர் சிங் (ஹைடர் – பிஸ்மில் பாடல் – இந்தி)

சிறந்த பின்னணி பாடகி – உத்ரா உண்ணி கிருஷ்ணன் (சைவம்-அழகே அழகு பாடல்)

சிறந்த சுற்றுச்சூழல்/பாதுகாப்பு படம் – ஓட்டல் (மலையாளம்)

சிறந்த பிராந்திய மொழி திரைப்படம் – குற்றம் கடிதல் (தமிழ்)

சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)

சிறுவர்களுக்கான சிறந்த படம் – காக்கா முட்டை

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது – ஆஷா ஜோகர் மாஜே (வங்காளம்)

சிறந்த அசாமிய படம் – ஒதெல்லோ

சிறந்த வங்க மொழிப் படம் – நிர்பஷிடோ

சிறந்த கன்னடப் படம் – ஹரிவு

சிறந்த கொங்கனி படம் – நாசோம் – ஐஏ கும்பசார்

சிறந்த மலையாளப் படம் – ஐன்

சிறந்த மராத்திப் படம் – கில்லா

சிறந்த ஓடிய படம் – ஆடிம் விச்சார்

சிறந்த பஞ்சாபி படம் – பஞ்சாப் 1984

சிறந்த தெலுங்குப் படம் – சந்தமாமா காதலு

சிறந்த ஹரியான்வி படம் – பக்டி தி ஹானர்

சிறந்த ராபா இன படம் – ஓரோங்

சிறந்த துப்பறியும் படம் – பும் ஷாங்

Share.
Leave A Reply

Exit mobile version