ஆடம்பரத்துக்கு பெயர்போன டுபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, அதை வீதியில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர்.

The $7.5 million Gold Lamborghini Aventador is coming to UAEவெளிப்புறத்தில் தங்கத்தகடு, வைரக்கற்களுடன் கூடிய முகப்பு விளக்குகள், உள் இருக்கை மற்றும் மேற்கூரையில் தங்க இழைகளில் நவரத்தின கற்களின் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய இந்த காரின் கண்ணாடிகள் அனைத்தும் குண்டுகளால் துளைக்க இயலாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ஆம் ஆண்டு டுபாய் கார் கண்காட்சியில் இடம்பெற்ற இந்த ‘லம்போர்கினி அவெண்டாடர்  LP700-4.’ கார், வெறும் காட்சிப் பொருளாக மட்டுமின்றி, V12  இயந்திரத்துடன் மூன்றே வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிப்பிடிக்க வல்லது.

இதன் விலையாக 2 கோடியே 70 லட்சம் திர்ஹம் (இலங்கை மதிப்புக்கு சுமார் சுமார் 98 கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version