ஆப்கானின் காபுல் நகரில் வேண்டுமென்று போலியான குற்றச்சாட்டு சுமத்தி கும்பல் ஒன்றினால் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்கு நாட்டின் சம்பிரதாயங்களை மீறி இடம்பெற்றது.
பார்குண்டா என்ற பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்கள் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பார்குண்டா புனித குர்ஆனை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இது குறித்து விசாரித்த பொலிஸார் இந்த குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப் பிட்டுள்ளனர்.
பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது பொலிஸார் அதனை தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆண்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த கும்பல் பெண் மீது தடிகள் மற்றும் கற்க ளால் மோசமாக தாக்கி கொலைசெய்து பின்னர் அவரது உடலை தீமூட்டி இருத்தனர்.
இந்த சம்பவம் நடக்கும்போது பொலிஸார் அதனை பார்த்து நின்றனர். குர்ஆனை அந்த பெண் எரித்ததாக தாக்குதல் நடத்தியவர்கள் குற்றம்சாட்டியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிக் கிரியை நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் வழமைக்கு மாறாக சவப்பெட்டியை பெண்களே தூக்கிச் சென்றனர்.
முன்னதாக அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட் டவர் என்றும் குடும்பத்தினர், அயலில் இருப்பவர்களுடன் மோதலில் ஈடுபட்டிருந்தவர் என்றும் குறிப் பிடப்பட்டிருந்தது.
ஆப்கானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மோசமான நிலையில் இருந்தபோதும் இவ் வாறான வன்முறையில் ஈடுபடும் பெரும்பாலான வர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி விடுகின் றனர்.