அப்பா உன்னிகிருஷ்ணனைப் போலவே முதன் முதலாக சினிமாவில் பாடிய பாடலுக்கு தேசிய விருது பெற்றுள்ளார் அவரது மகள் உத்ரா. ஒரே ஒரு வித்தியாசம் அப்பா பாடியது ஏ.ஆர். ரகுமான் இசையில் மகள் பாடியது அவரது மருமகன் ஜி.வி.பிரகாஷ் இசையில் என்பதுதான்.
சில நிமிடங்கள் மட்டுமே சினிமா பாடலை பயிற்சி செய்த உத்ரா பாடியது இசையமைப்பாளருக்கு பிடிக்கவே,இயக்குநரும் ஓகே சொல்ல இந்த பாடலைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார் உன்னி கிருஷ்ணன்.
முதல் பாடலுக்கு விருது
கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசைகள் பாடினாலும் புதிய பாடலை முதன் முறையாக சைவம் படத்தில் அழகே… அழகு என்று பாடி அதற்கு தேசிய விருது பெற்றுள்ளார்
முத்துக்குமாரின் வரிகள் பாடலாசிரியர் முத்துக்குமாரின் அழகான எளிமையான வரிகள் தனது மகளுக்கு பாட எளிதாக இருந்தது என்று கூறியுள்ள உன்னி கிருஷ்ணன் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
அப்பாவுக்கும் தேசிய விருது
21 ஆண்டுகளுக்கு முன்னர் காதலன் படத்தில் ஜி.வி.பிரகாஷின் மாமா ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் முதன் முதலாக ‘என்னவளே… அடி என்னவளே…’ என்று பாடி தேசிய விருது வாங்கினார் உன்னிகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
அழகே… அழகு