“மழை ஓய்ந்­தாலும் தூவானம் விட்­ட­பா­டில்லை” என்ற நிலை­மையே இன்று வடக்கில் உருவாகியுள்ளது.

அதா­வது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் தோன்­றி­யுள்ள “ஊடல்” ஊட­கங்­க­ளுக்கு அப்பால் தமிழ் மக்கள் மத்­தி­யிலும் பர­வ­லாகப் பேசப்­பட்டு வரு­கின்­றது.

இந்த நிலைமை ஆரோக்­கி­ய­மற்­றதோர் சூழ்­நி­லைக்கே வழி­வ­குக்கும் என்­பது பொது­வான அபிப்­பி­ராயம்.

கடந்த ஆட்­சியில் ஆளுநர் சந்­தி­ர­சிறி, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்குப் பெரும் தடைக்­கல்­லாக இருந்தார். அதே­போன்றே பிர­தம செய­லா­ளரும் இருந்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இவர்­களை வைத்தே வட­மா­காண சபையை செல்லாக்காசாக மாற்றி அமைத்­தி­ருந்தார்.

இது தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் எரிச்­ச­லையும் ஆத்­தி­ரத்­தையும் ஊட்­டி­யி­ருந்­தது. இருந்தும் நேரம் வரும் வரை அவர்கள் காத்­தி­ருந்­தனர். இறு­தியில் வெற்­றியும் கண்­டனர்.

இவ்­வா­றாக ஒரு முட்­டுக்­கட்டை நீங்­கி­யது என்று தமிழ் மக்கள் அமைதி கொண்­டுள்ள நிலையில், மீண்டும் பிர­த­ம­ருக்கும், முத­ல­மைச்­ச­ருக்குமிடையே உரு­வா­கி­யுள்ள “பனிப்போர்” எங்கே மீண்டும் நெருக்­க­டி­களை தோற்­று­வித்­து­வி­டுமோ என்ற சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வட க்கில் இடம்­பெற்­றது இனப்­ப­டு­கொலை என்ற தீர்­மா­னத்தை ஏகமன­தாக நிறை­வேற்­றி­யி­ருந்தார்.

இந்த விவ­காரம் அர­சியல் அரங்கில் பெரும் சர்ச்­சையை ஏற் ­ப­டுத்­தி­யி­ருந்­தது. புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­துள்ள நிலையில் இத்­த­கைய தீர்­மானம் அவ­சி­யமா? என்ற கேள்­வி­களை பலரும் எழுப்பியிருந்­தனர்.

அதே­வேளை, இழுத்­த­டிக்­கப்­பட்டு வரும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் மற்றும் சர்­வ­தே­சத்தின் அணு­கு­மு­றைகள் என்­பன வட­மா­காண சபையில் இத்­த­கைய பிரே­ர­ணையின் அவ­சி­யத்­தையும் எடுத்துக் கூறு­வ­தா­கவே இருந்­தன.

இந்தப் பின்­ன­ணியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சற்றுக் கடுப்­பாக தனது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அதா­வது, தமி­ழ­கத்தின் தந்தி தொலைக்­காட்­சிக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வழங்­கிய பேட்­டியில், “விக்­னேஸ்­வரன் ஒரு பொய்­காரர்.

வடக்கில் இனப்­ப­டு­கொலை நடந்­துள்­ளது என அவர் தெரி­வித்­தி­ருப்­பது வெறும் பொறுப்­பற்ற கருத்து. இதனை அவர் வாபஸ் பெற வேண்டும் அவ­ருடன் பேச நான் தயா­ராக இல்லை என தெரி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன் பிர­பா­க­ரனின் புக­ழாசை கார­ண­மாக தமிழ் மக்கள் அழி­வு­களை சந்­தித்­தனர் எனவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்திருந்தார்.

மேலும் தான் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்யும் போது முத­ல­மைச்­சரை சந்­திக்கும் நோக்­க­மில்லை” எனவும் கூறி­யி­ருந்தார்.

அது­மாத்­தி­ர­மன்றி, நல்­லாட்சி மிக்க அர­சாங்­கத்­துடன் விளை­யா­ட ­வேண்டாம். இதுவே இனவாதிகளுக்கான எனது இறுதி எச்­ச­ரிக்கை என்றும் கூறி­யி­ருந்தார் ரணில்.

இது தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கருத்து வெளி­யி­டு­கையில், உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனக் ­கோ­ரி­யமை ஒரு­போதும் இன­வா­த­மாக முடி­யாது.

உண்­மையை முதலில் அறிந்தால் தான் நல்­லெண்ணம் பிறக்கும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இந்தப் பின்­ன­ணி­யி­லேயே இரு­வ­ருக்­கு­மி­டையில் சொற்போர் மூண்­ட­துடன் ஒரு­வ­ரோடு ஒருவர் முரண்­படும் நிலைமை தோன்­றி­யுள்­ளது.

இதே­வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வடக்கு முதல்­வர் விக்னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டையில் ஏற்­பட்­டி­ருந்த இந்த முறுகல் நிலை ஜனா­தி­ப­தியின் வடக்கு விஜ­யத்தின் பின்­னரும் முடி­வுக்கு வரா மல் தொடர்­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாள் விஜ­யத்தை மேற்­கொண்டு யாழ். பய­ணித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அங்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் உட்பட பல்­வேறு தரப்­பி­னரை சந்­தித்­தி­ருந்த போதிலும் முத­ல­மைச்­ச­ரு­ட­னான சந்­திப்பை புறக்­க­ணித்­தி­ருந்தார்.

பிர­த­மரின் மூன்று நாள் வடக்கு விஜ­யத்தில் பல்­வேறு தரப்­பி­ன­ருடன் சந்­திப்­புக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதி லும் முதல்­வ­ரு­ட­னான சந்­திப்­புக்கு நேரம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. சந்­திப்பு, நிகழ்ச்சி நிர­லிலும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை, அண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஆகியோர் வடக்­கிற்கு விஜயம் செய்­தி­ருந்­தனர்.

dcp654964646464-2இந்த விஜ­யத்தின் போது முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வரவேற்­ற­துடன் அவ­ருடன் சுமு­க­மான உரை­யா­டலை மேற்­கொண்­டி­ருந்தார்.

அதே­வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும் ஒரு­வரை ஒருவர் சந்­திப்­பதை தவிர்த்து கொண்டதாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­போன்று எந்­த ­கட்­டத்­திலும் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மா­க­வேனும் கைலாகு கொடுக்­க­வில்லை. இது தமிழ் ஊட­கங்­களில் முக்­கிய இடத்தை பிடித்­தி­ருந்­தது.

இத­னி­டையே, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இது தொடர்­பிலும் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது.

அதா­வது, பிர­த­ம­ரிடம் தங்­களின் வட­ப­குதி விஜ­யத்தின் போது முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை சந்­திக்கும் சாத்­தி­யங்கள் உள்­ள­னவா என்று வின­விய போது, அது தொடர்பில் எந்த விண்­ணப்­பமும் முன்வைக்­கப்­ப­ட­வில்லை என ஒற்றைச் சொல்லில் பதி­ல­ளித்­தி­ருந்தார்.

இது தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் வின­விய போது, பிர­த­மரின் யாழ்.விஜயம் கட்சி சார்­பா­னது. அதே­வேளை, நாம் அந்தக் கால­கட்­டத்தில் பல்­வேறு நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப ஏற்கனவே திட்டம் வகுத்­தி­ருந்தோம் என்றார்.

இது ஒரு வகையில் ஒரு­வரை ஒருவர் தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கான சாக்குப் போக்­காவே கருத வேண்­டி­யுள்­ளது.

இந்த வித­மான போக்­குகள் தொடரும் பட்­சத்தில் அது முன்னர் இருந்த நிலைக்கு வட­மா­காண சபையை கொண்டு நிறுத்­துமோ என்ற ஐயப்­பாட்டை தோற்­று­விப்­ப­தாக அமைந்­துள்­ளது.

எவ்­வா­றி­ருப்­பினும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கூற்­றுக்கள் தமிழ் மக்­க­ளி­டையே கடும் விமர்ச­னத்­திற்கு ஆளா­கி­யுள்­ளன.

தமிழ் மக்­களை புறக்­க­ணிக்கும் வகை­யிலும் எடுத்­தெ­றிந்து பேசும் வகை­யிலும் காணப்­ப­டு­வ­தாக பொது­மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

கடந்த காலத்தை ஒரு தடவை திரும்பி பார்த்தால் வடக்கு -கிழக்கு மக்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கூற்­றுக்கள் குறித்து மிகுந்த விசனம் கொண்­டி­ருந்­த­துடன், சர்­வ­தேச ரீதியில் புலி­களை அந்நி­யப்­ப­டுத்­தவும் சர்­வ­தேச வலையில் புலி­களை சிக்­க ­வைக்­கவும் அவரே கார­ண­மாக இருந்தார் என குற்­றச்­சாட்­டுக் களை முன்வைத்திருந்தனர்.

இந்தப் பின்­ன­ணியில் அப்­போது நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பா­லான வடக்கு கிழக்கு மக்கள் வாக்­க­ளிப்­ப­தையும் தவிர்த்­தி­ருந்­தனர். இது மஹிந்த ராஜபக் ஷ வெற்­றி­வாகை சூட கார­ண­மாக அமைந்­தது.

இருந்த போதிலும் தற்­பொ­ழுது ஆட்சி மாற்­றத்­துக்கு ஒத்­து­ழைப்பு நல்­கிய வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமது நல்­லெண்­ணத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் அரசின் முயற்­சி­க­ளுக்கு ஆதரவளித்து வரு­கின்­றனர்.

இதனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் புரிந்து கொண்டு செயற்­ப­டு­வது புதி­தாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்கும் அர­சுக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இன்­றைய சூழ்­நி­லையில் தமிழ் மக்­களின் ஆத­ரவு அர­சாங்­கத்­துக்கு அவ­சியம் என்­பதை மறந்து போகக் கூடாது. உண்­மை­யான நல்­லி­ணக்கம், பரஸ்­பரம், கருத்துப் பரி­மா­றல்­க­ளிலும், விட்டுக் கொடுப்­பு­க­ளி­லுமே தங்­கி­யுள்­ளது. மாறாக ஏட்­டிக்கு போட்­டி­யான வகையில் நிலை­மைகள் தொட­ரு­மானால் அது விரி­சல்­க­ளையும் மோதல்­க­ளையும் முன்­நி­றுத்­து­வ­தாக அமையும்.

வட­மா­காண சபை­யுடன் இணக்­க­மான செயற்­பாட்டை பேண­ வேண்­டிய அவ­சியம் அர­சாங்­கத்­துக்கும், அதே­போன்று அர­சாங்­கத்­துடன் இணக்­க­மான சூழ்­நி­ையை பேண வேண்­டிய அவ­சியம் வட­மா­காண சபைக்கும் உள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும் பண்­பட்ட தலை­வர்கள் என்ற வகையில் விட்டுக் கொடுப்­பு­க­ளுடன் ஒரு­வ­ருடன் ஒருவர் சம­ர­ச­மாக தமது அர­சியல் பய­ணத்தை தொடர்­வ­தையே தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

அந்த வகையில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் துயரை துடைக்க இரு­வ­ரதும் ஒரு­மு­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.

மாறாக, இந்த வகை­யான போக்­குகள் தொட­ரு­மானால் அது “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற நிலைமைகளை மிஞ்ச செய்வதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆர்.பி

Share.
Leave A Reply

Exit mobile version