யாழ். பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் மாணவர்களா? அல்லது ரெளடிகளா? யாழ் பெண் பிள்ளைகளும் ரெடிகளா மாறிவிட்டார்கள். நீங்களே வீடியோவை பாருங்கள்.
யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்களை மாணவர்கள் சிறைபிடித்ததால் பதட்ட நிலை …(வீடியோ)
யாழ். பல்கலைக்கழக மருதனார்மட நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள் விரிவுரையாளர்களை சிறைபிடித்துள்ளதுடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை (31) வகுப்புக்களைப் புறக்கணித்து கதவடைப்பு போராட்டம் நடத்தினர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர்ந்தும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் கூறினர்.
கடந்த 16 ஆம் திகதியும் இவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடியபோது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.
2 வாரங்கள் ஆகியும் தங்களின் கோரிக்கைகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மாணவர்கள் மீண்டும் கடந்த 26ஆம் திகதி முகங்களில் பல வடிவங்களை வரைந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்தும் அலட்சியம் செய்து வருவதையடுத்து அவர்கள் இன்று (31) மூன்றாவது முறையாக போராட்டத்தில் இறங்கியுள்ளதுடன் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாகக்கூறினர்.
எனினும் மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இன்றுவரை தீர்க்கமான முடிவினை வழங்கவில்லை எனவும் உறுதி மொழிகளை கூறி போராட்த்தினை கைவிடச் சொல்லுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
நுண்கலைப் பீடத்தின் பிரதான நுழைவாயினை மூடி மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தினால் ஏனைய துறை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பாதிப்புக்களை ஏதிர் கொண்டிருந்தனர்.
இவர்களது ஆரம்ப கோரிக்கையாக தமது பாடத்திட்டத்தினை ஆரம்பிக்கக் கோரியும் பரீட்சைகளை நடத்த கோரியும் இணைப்பாளரை நியமனம் செய்யுமாறும் 3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இதன் போது மேற்படிக் கோரிக்கைகளை செவிமடுத்த நிர்வாகத்தினர் தற்போது பரீட்சைக்கான திகதிகளை அறிவித்துள்ளனர்.
இதுதவிர கடநத 23 ஆம் திகதி திங்கட் கிழமை நிர்வாகம் மாணவர்களிற்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தது. இருநத போதும் இன்றுவரை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
அதே போன்று இன்றுவரை இத் துறைக்காக இணைப்பாளரை தெரிவு செய்து தரப்படவில்லை. இதனால் தொடர்ச்சியான பாதிப்புக்களை இம்மாணவர்கள் எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சினை சம்மந்தமாக கலைப்பீட பீடாதிபதியுடன் 6 ற்கும் மேற்பட்ட தடவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனாலும் எந்தவிதமான தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக கலைப்பீட பீடாதிபதியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது மேற்படிப் பிரச்சினைகள் சம்மந்தமான கலந்துரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் மாணவர்கள் அதனை நிராகரித்து தொடர்ச்சியாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இது இவ்வாறாக உள்ள நிலையில் மாணவர்கள் மதியம் கதவடைப்பு செய்து போராட்டம் செய்தமையினால் விரிவுரையாளர்கள் வீடுகளிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.இதனால் அவ்விடத்தில் பதற்ற நிலை தோன்றியது.
விரிவுரையாளர் மாணவர்கள் அவ்விடத்தில் வாக்குவாதப்பட்டனர்.
சம்பவம் அறிந்த கலைப்பீடாதிபதி சிவநாதன் மற்றும் சிரேஸ்ட பதிவாளர் உள்ளிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மருதனார் மடத்தில் உள்ள நுண்கலைவளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட விரிவுரையாளரை மீட்க முயன்றனர்.
இதன் போது மாணவர்கள் கலைப்பீடாதிபதியுடன் வாக்குவாதப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.தொடர்ந்து மாணவர்கள் பீடாதிபதியுடன் முரண்பட்ட நிலையில் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை கதவடைப்பு போராட்டத்தை தொடரப்போவதாக எச்சரிக்கை செய்தனர்.
ஆனால் இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு ஒன்றும் தெரியாது என வழமையாக கூறுவது போன்று தெரிவித்தார்.
எனினும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,கலைப்பீட மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பிரதிநிதிகள் உபவேந்தரின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கூறியதாக ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினர்.
இத்தனைக்கும் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர்,கலைப்பீடாதிபதி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பல இழுபறிகளுக்கு மத்தியில் கலைப்பீடாதிபதி எழுத்து மூலமாக நாளை மதியம் 2 மணியளவில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டள்ள மாணவர்களிடம் தெரிவித்ததை அடுத்து தற்காலிகமாக போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது.