மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் பாராளுமன்ற உறுப்டபினர் பொன்.செல்வராசாவின் வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்தவர் மரணமானதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இறந்தவர் வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த நல்லதம்பி கணேசலிங்கம் (62) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்தவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறறந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.