சிறுமி ஒருவரை கடந்த ஐந்து வருடங்களாக அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிக்கட்டு வைரங்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

16 வயதுடைய சிறுமியையே சந்தேக நபர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றினையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் தாய் தனது கணவரின் மரணத்தின் பின்னர் இரு நபர்களுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர்களுள் இரண்டாவதாக அப்பெண்ணுடன் வாழ்ந்தவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான தனது   சித்தப்பா 2010ம் ஆண்டு முதல் தாய் வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version