உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்ட 11 வயது சிறுவன், இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாராபாங்கி மாவட்டம் ராகேலாமு கிராமத்தை சேர்ந்தவர் ஷாவிராஜ் இவருடைய மகன் சிவா(வயது 11) சிவா பாராபாங்கியில் உள்ள பாடசாலையில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
சிவாவின் வகுப்பில் 3 மாணவர்கள் தங்களது பென்சில் மற்றும் ரப்பரை காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வகுப்பில் இருந்த மாணவர்களின் பைகள் அனைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது சிவாவின் பையில் பென்சில் மற்றும் ரப்பர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து வகுப்பாசிரியர், ராகேலாமு அகடமியின் அதிபர் லாலித் வர்மாவிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாடசாலை அதிபர், சிறுவன் சிவாவை கொடூரமாக தாக்கிஉள்ளார் சிறுவன் மாலை வீட்டிற்கு சென்றதும் தனக்கு வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் அதன் பின்னர் சிறுவன் இரத்த வாந்தியும் எடுத்துள்ளார்.
உடனடியாக சிவாவை அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் பாடசாலை அதிபர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்துள்ளத, சாஜீவன் என்பவரது மகன் சுதீரை பாடசாலை அதிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சிவா உயிரிழப்பு தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாணவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, அறிக்கை வந்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.