தனது பிறந்த நாளுக்கு முன்தினம் கழுத்தறுபட்டு சிறுவன் உயிரிழந்தமை வவுனியா மக்களை அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

பாடசலை முடித்து வீடு திரும்பிய சஞ்சய், மர்மமான முறையில் வீட்டின் பின்புறமாக களுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

10 வயது சிறுவனைக் கொன்றது யார், கொலையின் பின்னணி என்ன, மரணத்தின் மர்மம் என்ன என்பன புரியாத புதிராகவுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் தடயங்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்தனர். சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற வேண்டும் என்ற ஆசையுடன் கல்வியைத் தொடர்ந்த சஞ்சய் இன்று உயிருடன் இல்லை. அவன் படித்த பாடசாலை சோகத்தில் மூழ்கியுள்ளது.

11133878_860897303972276_1595989443303676450_n

Share.
Leave A Reply

Exit mobile version