DSC00578

 

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் ஆணின் சடலம் மீட்பு
11-04-2015

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிளிநொச்சி பொலிசாரால் மீட்கப்பட்டள்ளது. கிளிநொச்சி திருவையாற்றை சேர்ந்த பூகோலகநாதன் தயாபரண் வயது (21) என அடையாளம் காணப்பட்டார்.

புதுமுறிப்பு குளத்தினுடைய கரையை வந்தடைந்தது நிலையில் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மக்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு தெறியப்படுத்திய பின்னர் பொலிசார் வருகை தந்த சடலத்தை கரைக்கு எடுத்து சோதனைக்குட்படுத்திய போது அடையாள அட்டை மீட்கப்பட்டு அதன் பின்னரே சடலம் அடையாளம் காணப்பட்டது.

ஆனாலும் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எவையும் தற்போது கண்டுபிடிக்கப்படவில்லை மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலத்தினை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version