குவைத் நாட்டினை சேர்ந்த தனவந்த பெண்மணியொருவர் தனது தாயாரின் நினைவாக மன்னார் கரிசல் மக்களுக்கான வீடமைப்பு திட்டமொன்றினை வழங்கியுள்ளார்.

இலங்கையில் இயங்கிவரும் ஜமாத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவிடத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் முன்வைத்த தேவைப்பாடுகள் தொடர்பில் அந்த அமைப்பு குவைத் சகாத் நிதியத்தின் உதவியுடன் இதனை பெற்றுக் கொடுத்துள்ளது.

நேற்று சனிக்கிழமை இந்த வீடுகள் அம்மக்களிடம் கையளிக்கப்பட்டன. மிகவும் எளிமையாக இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கை்கான குவைத் நாட்டின் துாதுவர், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், குவைத் நாட்டின் பரேபாகாரி டாக்டர் நதா மற்றும் தொழிலதிபர் எஸ்.கே.பீ.அலாவுதீன் ஹாஜியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

11080896_1061121930570668_3262121340527175651_n

Share.
Leave A Reply

Exit mobile version