மன்மத ஆண்டு என்ற பெயரைக் கேட்கிறப்பவே கிளுகிளுப்பா இருக்குதல்ல. பிறக்கப்போகும் இந்த புத்தாண்டில் செக்ஸ் குற்றங்களும் அதிர்ச்சிகர நிகழ்ச்சிகளும் அதிகமாக நடக்கப் போகின்றது எனக்கூறி ஜோதிட வல்லுநர் ஒருவர் சிலிர்க்க வைக்கின்றார்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் திகதி பிறக்கும் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலானதுதான். ஆனால் வரப்போகும் ஆண்டின் பெயர் மன்மத ஆண்டு என்பதால் அது டபுள் எக்ஸ்ரா ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.
இந்த மன்மத ஆண்டு முழுக்க முழுக்க பாலியல் தொடர்பான அடேங்கப்பா மற்றும் அடச்சி சமாச்சாரங்கள் எக்கச்சக்கமாக நிகழும் என்று இணைய வெளி தொடங்கி எல்லா வெளிகளிலும் பகிரப்பட ஆரம்பித்திருக்கின்றது.
சும்மாவே டான்ஸ் ஆடும் நம்மாளுங்க டிரம் சத்தத்தை கேட்ட பிறகு ஆடாம இருப்பாங்களா? மன்மத ஆண்டு பற்றி ஆளாளுக்கு ஆரூடம் போட்டுத் தாளிக்கிறார்கள்.
தமிழ்லேயும் கலக்குற பிரபல நடிகைகளோட ஹாட் செல்பிகள் இந்த வருஷத்துல வெளியாகி சக்கைப் போடு போடப்போகுது.
மச்சான்ஸ் அதனால் மொபைல்ல நெட்கார்டை நச்சுன்னு ரீசார்ஜ் பண்ணி வெச்சுக்குங்க என்று பேஸ்புக்கில் ஜொள் நாற்று நட்டு வருகின்றார் சேலத்தை சேர்ந்த டங்காமாரி திவாகர்.
மன்மத வருஷம் முழுக்க பாலியல் அத்துமீறல் சமாச்சாரங்கள் நிறைய நடக்கப்போகுதாம். கெடுத்துப்புட்டான். வயித்துல புள்ளய குடுத்துப்புட்டான்னு வரும் புகார்கள் மலையாகக் குவியப்போகுதாம். என்று நெல்லையிலிருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல் தீயாய் சுடுகின்றது.
அதேநேரத்தில் உண்மையான காதல் ஜெயிக்கும் ஆண்டு இது. வருஷக்கணக்கான காதலை ஏற்காத பொண்ணுங்க தேடி வந்து லவ்வைச் சொல்லி பசங்களைத் திண்டாட வைப்பாங்க.
ஒரு முத்தம் கேட்டு போறாடுற லவ்வருக்கு மூச்சு திணற முத்த மழையே கிடைக்கும் என்று வழிசல் பதிவுகளுக்கும் பஞ்சமில்லை.
மன்மத ஆண்டில் உண்மையிலேயே இத்தனை அக்குறும்புகளும் நடக்கத்தான் போகுதா என்ற கேள்வியுடன் சில துறைகளின் வல்லுநர்களை சந்தித்துப் பேசியப் போது..
அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஆரூடங்களை அதிரடியாக பேசிப் பரபரப்பு ஏற்படுத்தும் கோவையை சேர்ந்த ஜோதிடம் மூகாம்பிகை தாசனை முதலில் சந்தித்தோம்.
அதேநேரத்துல பல அதிரடி நிகழ்வுகளையும் அதிர்ச்சிகர தகவல்களையும் இந்த வருஷம் கொண்டு வந்து கொட்டப்போகுது. இதுல எந்தச் சந்தேகமும் வேண்டாம். எல்லாத்தையும் கலந்து கட்டி சொல்றேன் கேட்டுக்கோங்க.
கலைத்துறையைச் சேர்ந்த ஒரு பிரபல பெண் கவனக்குறைவாக செயல்பட்டு மிகப்பெரிய அவப்பெயரை இந்த ஆண்டில் சந்திப்பார்.
அவர் நடிகையாகவும் இருக்கலாம். அல்ட்ரா மாடர்னான ஒரு பொருள் அவரது இரகசியங்களை அம்பலப்படுத்துற காரியத்தைப் பண்ணும்.
அதனால் அந்த பீல்டுல உள்ள பொண்ணுங்க ரொம்ப கவனமாக இருந்துக்கோங்க. இந்த ஆண்டுல காதல் கல்யாணங்கள் கொத்துக்கொத்தா நடக்கும்.
பொலீஸ் ஸ்டேஷன்களுக்கு லவ் மேரேஜ் பண்ணி வைக்கிற வேலை மிகப்பெரிய டூட்டியாக உருவாக போகுது.
அப்புறம் தமிழகத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் பெரிய சிக்கல்ல சிக்குவார். ஜெயில் வரைப் போயி தன்னோட ஆன்மீக சேவையை செய்ய வேண்டிய சூழல் அவருக்கு வரும். அதேபோல் ஒரு பிரபல நடிகரை விபத்தால் இழப்போம்.
அரசியல் துறையில் இந்த மன்மத ஆண்டு பல மாயங்களையும் மர்மங்களையும் செய்யப்போகுது. நடிகர்கள் ஆரம்பிச்ச கட்சிகள் பலவீனமாகும். ஏன்டா கட்சி ஆரம்பிச்சோம்? அப்படின்னு அந்த நபர்களே நொந்து வெந்து போகுமளவுக்கு சூழல்கள் அமையும்.
லட்சக்கணக்கான மக்கள் போற்றும் ஒரு அரசியல் தலைவரை இந்த ஆண்டில் இழப்போம். காவிக்கொடியும் வண்ணக்கொடியும் இணைந்து செயல்படும். அந்த வகையில் காவிக்கொடி தமிழ் நாட்டில் அழுந்தக் காலூன்றும் சூழல்களை பெறும்.
மன்மத ஆண்டு தமிழ் ஆண்டாக இருந்தாலும் கூட இந்த தேசம் முழுமைக்கும் சில அதிர்வுகளை உருவாக்கும்.
இந்த ஆண்டுல தீவிரவாதிகளின் அட்டகாசங்கள் அதிகரிக்கும். கொடூர குணங்கள் தலையெடுக்கும். சில நேரங்களில் சும்மா இருப்பவன்கூட தீவிரவாதியாவான்.
இவங்களை எல்லாம் அடக்குறுதுக்கு புது சட்டங்கள் உருவாகும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்த சூழல் உருவாகும். பலதரப்பட்ட வெளிநாட்டு ஆளுங்க வியாபார ரீதியாக இந்தியா நாட்டுக்குள்ளே வருவாங்க.
அவங்க மூலமா நம்ம நாட்டின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு சிக்கல் வரலாம். எதிரி நாடுகளின் அச்சுறுத்தல் இருந்தால்கூட வெற்றி இந்தியாவுக்கானதாகவே இருக்கும்.
தென் இந்தியாவில் கடுமையான காற்றினால் பேராத்துக்கள் வரும். மீன், கோழி சாப்பிடுறது மூலமா பெரும் நோய் பரவி நிறைய உயிர்சேதம் ஏற்படுத்தும்.
இதைத்தடுக்க புது மருந்து கண்டுப்பிடிச்சாக வேணடியிருக்கும். சர்க்கரை வியாதி அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் நிறைய பிறக்கும். சீனப் பொருட்கள் உபயோகிக்காமல் தவிர்க்குறது நல்லது.
இல்லேன்னா அது மூலமா புதுவகை வைரஸ் நம்மைத் தாக்கும். ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இயற்கை பேரழிவு ஆபத்து உண்டு. கள்ளநோட்டுப் பழக்கம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரிக்கும். விமான விபத்துக்களுக்கான வாய்ப்பு அதிகம்.
இதையெல்லாம் தாண்டிப் பல ஆச்சரியங்களும் நிகழும். தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிரபல முருகன் கோயிலில் ஒரு அதிசயம் நிகழும். பெண்களுக்கு இது பெரும்பாலும் சந்தோஷமான ஆண்டுதான். பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும் என்று சிலிர்க்க வைத்தார்.
இதுபற்றி ஊட்டி அரசு கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் மணிவண்ணனிடம் கேட்டபோது மன்மதனைக் காமத்தின் அடையாளமாக மாற்றி பார்ப்பது தவறு.
அவன் அன்பின் சின்னம். மன்மத ஆண்டை அன்பு பெருக்கெடுக்கும் ஆண்டாக பாருங்கள். வசந்தம் வீசப்போகும் ஆண்டாக பாருங்கள்.
இப்படி அணுகுவதை விடுத்து பாலியல் குற்றம் அதிகரிக்கப் போகின்றது என்று சொல்வது கற்பனை தீவிரவாதம்.
மன்மத ஆண்டில் காதல் பெருக்கெடுத்து கலப்பு திருமணங்கள் நிறைய நடக்குமென்று சொன்னால் அது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் தானே. சமூக சமநீதி வளர்வதற்கான அடையாளம் அது. வாருங்கள் மன்மத ஆண்டில் பாசத்தை விதைப்போம். அன்பை வளர்ப்போம் என்கின்றார்.
இறுதியாக செக்ஸாலஜிஸ்ட் டொக்டர் குமாரசாமியிடம் கேட்டபோது ஒரு வருடத்தின் பெயருக்கேற்ப அந்த வருடம் முழுவதும் நிகழ்வுகள் ஏற்படும் என்பது பேத்தலான கற்பனை.
மன்மத ஆண்டு என்கின்ற பெயரால் அந்த ஆண்டில் பாலியல் ரீதியான குற்றங்களும் சம்பவங்களும் அதிகம் தலைத்தூக்கும் என்பது வதந்தியேயாகும்.
பாலியல் அத்துமீறல்கள் திருமணம் தாண்டிய உறவு என்பதெல்லாம் காலங்காலமாக இருந்து வரும் தவறுகள்.
அவை இந்த ஆண்டில் மட்டும் அதிகம் நிகழும் என்பதும் தவறான வாதம் என்று நறுக்கென முடித்தார். என்னத்தான் நடக்கிறது பார்ப்போம்.
இதை படிக்கும் போது அந்த இந்த நாள் ஞாபகத்தில் தியாக ராஜ பாகவதரின் மன்மத லீலையை வென்றாருண்டோ என்ற ஹரிதாஸ் படப்பாடலும் தனுஷின் மன்மத ராசா கன்னி மனசைக் கிள்ளாதே என்ற திருடா திருடி பாடலும் நினைவுக்கு வருகின்றது.
மூகாம்பிகை தாசன் சொல்லும்
மூகாம்பிகை தாசன் சொல்லும்
மன்மத ஆண்டு ராசிபலன்
மேசம் – பணப்புழக்கம் பிய்ச்சுக்கும்
ரிஷபம் – பொன்னும் பொருளும் எகிறும்
மிதுனம் – ராஜயோகம்
கடகம் – காலைச் சுற்றிய கஷ்டம் கழறும்
சிம்மம் – வம்பு வழக்கிலிருந்து விடுபவடுவர்.
கன்னி – எதிரிகூட நண்பேண்டா
துலாம் – உபரி வருமானம் உயரும்
விருச்சிகம் – தப்பித் தவறி ஜாமீன்
கையெழுத்து போடக்கூடாது
தனுசு – தேஜஸ் அதிகரிக்கும்
மகரம் – வண்டி வாகனம் பெருகும்
கும்பம் – விரக்தி அமைதியின்மைக்கு வாய்ப்புண்டு
மீனம் – வழக்கு ஏதாச்சும் இருந்தா ஒரு வருஷம் ஜவ்வா இழுத்துடுங்க.