யேமனில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி நிலை பெரும்­பான்மை சுன்­னி­க­ளுக்கும்,சிறு­பான்மை ஹெளதி ஷியாக்­க­ளுக்கும் இடை­யி­லா­னது. அவர்கள் இரு சாரா­ருமே யெமன் பிர­ஜைகள் (யெம­னிகள்).

இதில் ஹெள­தி­க­ளுக்கு ஈரான் ஆயு­தங்­க­ளையும் வழங்கி பயிற்­சி­க­ளையும் அளித்­துள்­ளது. ஈரானின் பரம எதிரி­யான சவூதி சுன்­னி­க­ளுக்கு ஆத­ர­வாக கள­மி­றங்கி சவூதி அரேபி­யா­வுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான யுத்த கள­மாக தற்­போது யெமனை மாற்­றி­யுள்­ளது.

கடந்த மாதம் ஹெள­திகள் யெமன் தலை­நகர் சனாவை தாக்கி கைப்­பற்­றி­ய­போது கவூதி அரோ­பியா ஹெளதி இலக்­கு­களைத் தாக்கி அழித்து மர­ணத்­தையும் அழி­வு­க­ளையும் ஏற்­ப­டுத்தி அதற்கு பதில் அளித்­தது.

yemen

ஒமானைத் தவிர வளை­குடா கொடுங்கோல் ஆட்­சி­யா­ளர்கள் சவூ­திக்கு பக்க பல­மாக இருக்­கின்­றனர். ஏனைய அரபு சர்­வா­தி­கா­ரி­களும் சவூ­தி­யுடன் இணைந்­துள்­ளனர். இதில் எகிப்தும் இடம் பிடித்துள்ளது.

அப்­துல்லாஹ் சிசி

அங்கு சதிப்­பு­ரட்சி மூலம் ஆட்­சிக்கு வந்த அப்­துல்லாஹ் சிசி மூன்று யுத்தக் கப்­பல்­களை அனுப்பி வைத்­துள்ளார்.

மொஹமட் முர்ஸி

எகிப்தில் முதற் தட­வை­யாக ஜன­நா­யகத் தேர்தல் மூலம் ஆட்­சிக்கு வந்த கலா­நிதி. மொஹமட் முர்ஸியின் ஆட்­சியை கவிழ்த்து  அப்­துல்லாஹ் சிசியை சதிப்­பு­ரட்சி மூலம் ஆட்சி பீடம் ஏறவைப்பதற்காக சவூதி அரே­பியா, ஐக்கிய அரபு இராச்­சியம் மற்றும் குவைத் என்­பன 11 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை செல­விட்­டுள்­ளன.

இதற்கு நன்றி உப­கா­ர­மாகத் தான் சிசி இப்­போது சவூ­திக்கு கை கொடுத்­துள்ளார்.

இஸ்­ரே­லுடன் பகி­ரங்­க­மா­கவே ஒத்­து­ழைத்து வரும் சிசி ஏற்­க­னவே 2500க்கும் அதி­க­மான அப்­பாவி எகிப்­தி­யர்­களின் இரத்தக் கறை­களை தனது உடலில் தாங்­கி­ய­வ­ரா­கவே காணப்­ப­டு­கின்றார்.

தனது வர­லாற்றில் எந்­த­வொரு பிரச்­சி­னை­யையும் தீர்த்து வைக்­காத அரபு லீக் 48 மணித்தியாலங்களுக்கு இடையில் எகிப்தின் துறை­முக நக­ரான ஷாம் அல் ஷேக் இல் கூடி ஒரு கூட்டு இரா­ணுவ படையை ஸ்தாபிக்க தீர்­மா­னித்­துள்­ளது.

இந்தப் படை நிச்­ச­ய­மாக ஜெரு­ச­லத்­தையோ இல்­லது பலஸ்­தீ­னத்­தையோ விடு­விப்­ப­தற்­கான ஏற்­ப­டுத்­தப்­பட்­டது அல்ல.

வறு­மை­யிலும் பட்­டி­னி­யிலும் வாடும் அப்­பாவி பலஸ்­தீன மக்­களை காஸாவில் அடுத்­த­டுத்து கொன்று குவித்து இன ஒழிப்பு நட­வ­டிக்­கையில் இஸ்ரேல் ஈடு­பட்ட போது இக்­கட்­டான நிலையில் கைகோர்க்க முன்­வந்­தி­ருக்கும் சவூதி தலை­மை­யி­லான இந்த சகோ­தரக் கூட்­டணி எங்கே இருந்­தது என்­ப­துதான் இஸ்­லா­மிய உலகை வியப்­ப­டைய வைத்­தி­ருக்கும் கேள்­வி­யாகும்.

பலஸ்­தீ­னர்­க­ளுக்கு உத­வு­வது ஒரு புறம் இருக்­கட்டும் எந்­த­வொரு அரபு சர்­வா­தி­கா­ரியும் இஸ்­ரே­லிய ஸியோ­னி­ஸத்தின் காட்­டு­மி­ராண்டித் தனத்தை கண்­டிக்க கூட முன்­வ­ர­வில்லை.

காஸா மத்­திய தரை கடல் பிர­தே­சத்தை அண்­டிய 365 சதுர மைல் பரப்­ப­ளவு கொண்ட ஒரு நீண்டு விரிந்த சிறிய கட­லோரப் பிர­தே­ச­மாகும்.

எகிப்­துக்கும் இஸ்­ரே­லிய ஆள்­புல பகு­திக்கும் இடை­யி­லான இந்தப் பகு­தியில் சுமார் 1.5 மில்­லியன் பலஸ்­தீ­னர்கள் நசுங்­குண்டு வாழ்ந்து வரு­கின்­றனர்.

உல­கி­லேயே சனத்­தொகை அடர்த்தி கூடிய பிர­தே­சங்­களில் ஒன்­றாக இது காணப்­ப­டு­கின்­றது. இவர்களுள் அநே­க­மா­ன­வர்கள் அக­திகள்.

பாரம்­ப­ரி­ய­மாக இந்த மக்கள் வாழ்ந்த காணி­களும் வீடு­களும் இப்­போது அவர்­க­ளிடம் இருந்து பறிக்கப்பட்­டுள்­ளன.

அவ்­வாறு பறிக்­கப்­பட்ட காணி­க­ளையும் வீடு­க­ளையும் உள்­ள­டக்­கிய பிர­தேசம் தான் இன்று இஸ்­ரே­லாக எம் கண் எதிரே காட்சி அளிக்­கின்­றது.

யூத பயங்­க­ர­வாத குழுக்­களால் அந்த மக்கள் துப்­பாக்கி முனையில் துரத்­தப்­பட்­டனர். அவர்­களின் காணி­களில் அத்­து­மீறி பிர­வே­சித்த குடி­யேற்ற யூதர்கள் அவற்றை கப­ளீ­கரம் செய்­தனர்.

இவற்­றுக்­கெல்லாம் பிரிட்டிஷ் சாம்­ராஜ்­ஜியம் துணை­யாக நின்று 1948இல் சட்­ட­வி­ரோத யூத இராச்சியத்தை நிறுவ துணை போனது.

2000 ஆம் ஆண்டில் இஸ்ரேல் காஸாவில் ஊடு­ரு­வி­யது. மர­ணத்­தையும் அழி­வு­க­ளையும் அங்கே ஏற்படுத்­தி­யது. இஸ்ரேல் தனது மனம் போன போக்கில் பலஸ்­தீ­னர்­களை கொன்று குவித்­தது.

அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரன்ஸ் மற்றும் ஐரோப்­பிய நாடு­களும் அவர்­களின் அரபு சர்­வா­தி­கார பங்­கா­ளி­களும் இந்த விட­யத்தில் கண்டும் காணா­த­வர்­க­ளா­கவே இருந்­தனர்.

ஐக்­கிய நாடுகள் சபை இஸ்­ரேலின் இந்த அட்­டூ­ழி­யங்­களை யுத்தக் குற்றம் என் வர்­ணித்தும் இந்த நாடுகள் அதை கண்டு கொள்­ள­வில்லை.

ஐக்­கிய நாடுகள் சபைக்கோ வார்த்­தை­களால் இதை வர்­ணிப்­பதை தவிர இஸ்­ரேலை எதிர் கொள்ள வேறு எந்த வித­மான சக்­தியும் இருக்­க­வில்லை.

2008 டிசம்பர் 27இல் இஸ்ரேல் பலஸ்­தீ­னத்­துக்கு எதி­ரான மிக மோச­மான இனப் படுகொலையை மேற்கொண்­டது.

அமெ­ரிக்­காவால் வழங்­கப்­பட்ட மிக மோச­மான அழி­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடிய மிக நவீன விமா­னங்­களும் ஆயு­தங்­களும் இதில் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் கார­ண­மாக காஸா ஒரு பலி பீட­மாக மாறி­யது.

22 நாட்கள் நடத்­தப்­பட்ட மூர்க்­கத்­த­ன­மான தாக்­கு­தலில் இஸ்ரேல் 1334 பலஸ்­தீ­னர்­களைக் கொன்று குவித்­தது. இவர்­களுள் மூன்றில் ஒரு பங்­கினர் சிறு­வர்கள். 5450 பேர் காயம் அடைந்­தனர்.

இதிலும் மூன்றில் ஒரு பங்கு சிறு­வர்கள். ஒரு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்­தனர். ஐம்­ப­தா­யிரம் பேர் வீடு வாசல்­களை இழந்­தனர். 4100 வதி­விட கட்­ட­டங்கள் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டன. 17,000 கட்­ட­டங்கள் சேத­மா­கின.

(இது காஸாவில் உள்ள மொத்த கட்­டடங்­களில் 14 வீத­மாகும்). அமெ­ரிக்க சர்­வ­தேச பாட­சாலை உட்­பட 29 கல்விக் கூடங்கள் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டன. 92 பள்­ளி­வா­சல்கள் அழிக்­கப்­பட்­டன அல்­லது சேத­மாக்­கப்­பட்­டன.

1500 கடைகள் தொழிற்­சா­லைகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் நாச­மாக்­கப்­பட்­டன. 20 அம்­பி­யுலன்ஸ் வண்­டி­களும் அழிக்­கப்­பட்­டன. விவ­சாய நிலங்­களில் 35 முதல் 60 வீதம் வரையில் அழிந்து போயின. மொத்த இழப்­புக்­களின் பெறு­மதி 1.9 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு இடையில் ஒரு சிறிய ஓய்வு கொடுக்­கப்­பட்­டது. அது அெம­ரிக்­காவின் ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட பராக் ஒபாமா பதவிப் பிர­மாணம் செய்து கொள்­வ­தற்­காக வழங்கப்­பட்ட ஓய்­வாகும்.

2014 ஜுலை 7 திங்கள் கிழ­மை­யன்று இஸ்ரேல் மீண்டும் காட்­டு­மி­ராண்டித் தனத்தை கட்­ட­விழ்த்து விட்டது. விமான மார்க்­க­மா­கவும் தரை வழி­யா­கவும் நடத்­தப்­பட்ட இந்தத் தாக்­கு­தல்­களில் ஆண்­களும், பெண்­க­ளும, சிறு­வர்­களும், முதி­ய­வர்­களும் கொல்­லப்­பட்­டனர்.

இந்தத் தாக்­கு­தலில் 2500க்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்­களை இஸ்ரேல் கொன்று குவித்­தது. இவர்­களுள் சுமார் 80 வீத­மா­ன­வர்கள் அப்­பாவி சிவி­லி­யன்கள்.

இவர்­களில் 70 வீதத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் சிறு­வர்கள். 8000த்துக்கும் அதி­க­மா­ன­வர்கள் காயம் அடைந்­தனர். இவர்­களுள் சிலர் மிக மோச­மான காயங்­க­ளுக்கு ஆளானர்.

இஸ்ரேல் தொடர்ந்து மேற்­கொண்டு வரும் படு­கொ­லைகள் மற்றும் தாக்­கு­தல்கள் மூலம் இது­வரை 5 பில்­லி­ய­னுக்கும் அதி­க­மான அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சேதங்கள் விளை­விக்­கப்­பட்­டுள்­ளன.

40000த்துக்கும் அதி­க­மான வீடுகள் நாச­மாக்­கப்­பட்­டுள்­ளன. இரண்­டரை லட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் இடம் பெயர்ந்து நிர்க்­க­திக்கு ஆளா­கி­யுள்­ளனர்.

இவ்­வ­ளவு நாசங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­விட்டு சவூதி அரே­பி­யா­விடம் இருந்தும் ஐக்­கிய அரபு இராச்சியத்திடம் இருந்தும் மீள் கட்­ட­மைப்பு பணி­க­ளுக்கு உதவி கோர­வுள்­ள­தாக இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் அறி­வித்­துள்­ளமை மிகவும் வெட்கக் கேடா­ன­தாகும்.

இஸ்ரேல் படை­களால் வயோ­திப பெண்கள் ஈவு இரக்­க­மின்றி எட்டி உதைக்­கப்­ப­டு­வதும், கன்னத்தில் அறை­யப்­ப­டு­வதும், தாக்­கப்­ப­டு­வதும் சிறு­வர்கள் தாறு­மா­றாக இழுத்துச் செல்­லப்­ப­டு­வதும் காணொளிக­ளாக வெளி­யாகி அரபு சர்­வா­தி­கா­ரி­களைத் தவிர உலக மக்கள் அனை­வ­ரையும் அதிர்ச்சியில் உறைய வைத்­துள்­ளது.

குண்டு வீச்சு தாக்­கு­தலில் இருந்து தப்பிச் சென்ற குடும்­பங்­க­ளையும் இஸ்­ரே­லி­யர்கள் விட்டு வைக்­க­வில்லை. துரத்தி துரத்தி கொன்று குவித்­தனர்.

இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தஞ்சம் புக இட­மின்றி தவித்­தனர். உண்ண உண­வின்றி பருக தண்ணீர் இன்றி மருந்­துகள் இன்றி நாலா­பு­றமும் நசுக்­கப்­பட்டு மக்கள் தவிக்க விடப்­பட்­டனர். பலஸ்­தீ­னர்கள் வெளியேறு­வ­தற்கு இருந்த ஒரே­யொரு வழி­யான றபா நுழைவுப் பகு­தி­யையும் எகிப்து மூடி­யது.

ஒரு அரபு நாடும் ஒரு போத்தல் தண்­ணீரை கூட அனுப்பி வைக்­க­வில்லை. மாறாக மத்­திய கிழக்­கிற்கு வெளியே உள்ள கருணை உள்ளம் கொண்ட மக்­களால் அனுப்­பப்­பட்ட உணவு, மருந்­துகள் போன்ற நிவா­ரணப் பொருள்­களை கூட காஸா­வுக்கு செல்­ல­வி­டாமல் எகிப்து தடுத்து நிறுத்­தி­யது.

இந்தப் படு­கொ­லை­களும் அழி­வு­களும் மீட்­கப்­பட்ட போதெல்லாம் மத்­திய கிழக்கின் ஏனைய நாடு­களில் மயான அமைதி தான் நில­வி­யது. துருக்கி, கத்தார், ஈரான் ஆகிய நாடுகள் மட்­டுமே சியோ­னிஸ காட்­டு­மி­ராண்டித்தனத்­துக்கு எதி­ராக கடும் தொனியில் குரல் கொடுத்­தன.

இந்த அநி­யா­யங்­க­ளுக்கு மத்­தியில் அரபு சர்­வா­தி­கா­ரிகள் இஸ்­ரே­லுடன் கூடிக் குலாவிக் கொண்­டி­ருந்த வேளையில் இலத்தீன் அமெ­ரிக்க நாடுகள் இஸ்­ரேலை கண்­டித்து அந்த நாட்­டு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளையும் துண்­டித்­தன. பாதிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னர்­க­ளுக்கு உதவி வழங்­க­வ­தற்­காக அவர்­களை தமது நாடு­க­ளுக்கு வர­வ­ழைத்­தன.

கடந்த கால் நூற்­றாண்டு காலத்தில் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மத்­திய கிழக்கின் முஸ்லிம் நாடுகள் மீதான ஆக்­கி­ர­மிப்பு இந்தப் பிராந்­தி­யத்தை பல நூற்­றாண்­டுகள் பின் நோக்கி நகரச் செய்­துள்­ளது.

அரபு ஆட்­சி­யா­ளர்கள் இஸ்­ரே­லுடன் இரண்­டறக் கலந்து கூடிக் குலாவிக் கொண்டு பலஸ்­தீன மக்களின் எழுச்­சியை முடக்கி பாரிய இஸ்ரேல் இராச்­சியம் உரு­வாக துணை போகின்ற வரைக்கும் மத்­திய கிழக்கில் அரபு– இஸ்ரேல் மோதல் என்ற ஒரு மோதல் ஏற்­ப­டாது.

பலஸ்­தீன எழுச்­சியை அடக்கும் அசிங்­க­மான பொறுப்பு பலஸ்­தீ­னத்தில் எவ்­வித முக்­கி­யத்­து­வமும் அற்ற மஹ்மூத் அப்­பா­ஸி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இஸ்­ரே­லு­ட­னான பாது­காப்பு உடன்­ப­டிக்­கையின் போர்­வையில் அவர் பலஸ்­தீ­னர்­களை கைது செய்தும் சித்­தி­ர­வதை செய்தும் ஏன் கொலை செய்தும் கூட வரு­கின்றார்.

இவ்­வா­றாக இஸ்­ரே­லுக்கு எதி­ரான பலஸ்­தீன போராட்டம் கிட்­டத்­தட்ட முடக்­கப்­பட்­டுள்­ளது. இஸ்­ரே­லிய அட்­டூ­ழி­யங்­க­ளுக்கும் விரி­வாக்­கத்­துக்கும் எதி­ராக பலஸ்­தீ­னர்கள் கிளர்ந்து எழு­வதை மஹ்மூத் அப்பாஸ் நசுக்கி வரும் அதே­வேளை, இஸ்ரேல் இன்­னொரு புறத்தில் அவர்­களின் காணி­க­ளையும் சொத்­துக்­க­ளையும் பறித்தும் அழித்தும் அவர்­களை தலை தூக்க முடி­யாமல் தடுத்து வரு­கின்­றது.

அரபு சர்­வா­திகள் தமது நாட்டை பற்­றியோ தமது மக்­களைப் பற்­றியோ இஸ்­லாத்தைப் பற்­றியோ முஸ்­லிம்­களைப் பற்­றியோ மிகக் குறைந்த அக்­க­றையே கொண்­டுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் பலஸ்­தீன மக்­களின் துன்பம் அவர்­களின் விடு­தலை, அவர்கள் பறி­கொ­டுத்த காணி­களை விடு­வித்தல், ஜெரூ­ஸலம் நகரை விடு­வித்தல், முஸ்­லிம்­களின் முதல் கிப்­லாவும் மக்கா மதீ­னா­வுக்கு பிறகு முஸ்­லிம்­களின் மூன்­றா­வது புனித தல­மான மஸ்­ஜிதுல் அக்­ஸாவை விடு­வித்தல், என்­பன போன்ற விட­யங்­களில் அவர்கள் நிலைப்­பாட்டை விளக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

அவர்கள் தமது அதி­கா­ரத்தை பாது­காத்து தக்க வைத்துக் கொள்­வ­திலும் ஆடம்­ப­ர­மான சுக­போக வாழ்வை அனு­ப­விப்­ப­திலும், மக்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டித்த செல்­வங்­களை மேற்கு நாடு­களில் முத­லீடு செய்­வ­திலும் மட்­டுமே அக்­கறை கொண்­டுள்­ளனர்.

மக்கள் மத்­தியில் செல்­வாக்கிழந்­துள்ள அவர்­களின் ஆட்­சிகள் அடக்­கு­மு­றைக்கு புகழ் பூத்தவை. அமெரிக்க ஆதரவில் தங்கியிருப்பவை. இந்த ஆட்சிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்கள் எந்தவிதமான இணக்கத்துக்கும் தயா ராக உள்ளனர்.

இவ்­வா­றுதான் அவர்கள் தமது ஆன்­மாக்­களை விற்று இஸ்­ரே­லுடன் இர­க­சி­ய­மா­கவும் பகி­ரங்­க­மா­கவும் உற­வு­களைப் பேணி வரு­கின்­றனர். இந்தப் பிராந்­தி­யத்­துக்கு எதி­ரான இஸ்­ரேலின் அனைத்து வடிவமைப்­புக்­க­ளிலும் அவர்கள் ஒத்­து­ழைத்து வரு­கின்­றனர்.

அவர்கள் அமெ­ரிக்­கா­வு­டனும், பிரிட்­ட­னு­டனும், பிரான்ஸ், ஏனைய ஐரொப்­பிய நாடுகள் மற்றும் இஸ்ரேல் என்­ப­ன­வற்­றுடன் முஸ்லிம் நாடுகள் மீதான ஆக்­கி­ர­மிப்­பிலும் அழி­விலும் கைகோர்த்துள்ளனர்.

தமது வீடு­களில் வச­தி­யான முறையில் வாழ்ந்­தி­ருக்க வேண்­டிய மில்­லியன் கணக்­கான முஸ்­லிம்­களின் படு­கொ­லை­க­ளிலும் இவர்கள் கைகோர்த்­துள்­ளனர்.

இன்று தமது எதிர்­கா­லத்தின் மீதோ அல்­லது தமது பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தின் மீதோ எவ்­வி­த­மான நம்­பிக்­கையும் இன்றி சுமார் 18 மில்­லியன் முஸ்­லிம்கள் அகதி முகாம்­களில் காலத்தை கழித்து வரு­கின்­றனர்.

இந்த யுத்­தங்கள் கார­ண­மாக இஸ்­ரேலின் நன்­மைக்­காக முஸ்லிம் நாடுகள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளன.

இதுதான் இன்றைய மத்திய கிழக்கு.

-லத்தீப் பாரூக்

Share.
Leave A Reply

Exit mobile version