மஸ்­கெ­லியா மவு­ஸாக்­கலை நீர்த்­தேக்­கத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார்.

இவ்­வாறு உயி­ரி­ழந்­தவர் யாழ்ப்­பாணம் கைதடி பகு­தியைச் சேர்ந்த 19 வய­து­டைய அரு­ளா­னந்தன் டிலோஜன் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக மஸ்­கெ­லியா பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச் சம்­பவம் நேற்று வியா­ழக்­கி­ழமை முற்­பகல் இடம்­பெற்­றுள்­ளது.

மஸ்­கெ­லியா மொக்கா தோட்­டத்தில் நண்பர் வீட்­டிற்கு வந்த இவர் நேற்று காலை வேளையில் தனது நண்­ப­ரோடு நீராடச் சென்­றுள்ளார்.

அதன் பின் தனது நண்பர் நீராடி கொண்­டி­ருக்கும் வேளையில் திடீரென காணாமல் போயுள்­ள­தாக அவரின் நண்பர் மஸ்­கெ­லியா பொலி­ஸா­ருக்கு தெரி­வித்­துள்ளார்.

அதன் பின் சம்­பவ இடத்­திற்கு சென்ற பொலிஸார், கடற்­ப­டை­யினர் நீர்­தேக்­கத்தில் காணாமல் போன­வரை தேடும் பணியில் ஈடு­பட்ட போது சுமார் 5 மணித்­தி­யா­லங்­களின் பின் சட­லத்தை மீட்­டனர்.

குறித்த இளைஞன் கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து மஸ்­கெ­லியா பகு­தியில் நண்­பரின் வீட்­டிற்கு வருகை தந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC08442

Share.
Leave A Reply

Exit mobile version