பதுளை ஹாலி – எல விகாரையில் பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹாலிஎல – உடுகொஹ_வில ஸ்ரீ போதிராஜா விகாரையில் உள்ள களஞ்சிய அறையில் 18 வயதான குறித்த பிக்கு தற்கொலை செய்து கொண்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
எனினும். அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post Views: 61