போருக்குப் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 324 பேர், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 723 முன்னாள் போராளிகளில், 324 பேர், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளனர்.

இவர்களில், பெரும்பாலானவர்கள், ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்து விட்டனர். 4 பேர் மருத்துவர்களாகவும், 2 பேர் பொறியியலாளர்களாகவும் வெளியேறியுள்ளனர்.

fomer_ltte_cadersபோர் முடிவுக்கு வந்த பின்னர், 12,088 விடுதலைப் புலிகள் சரணடைந்ததாகவும், அவர்களில், 46 பேர் மட்டுமே, தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் மேஜர்“ ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில், 3000 பேர் வரை, காவல்துறை அல்லது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில், பணியாற்றுகின்றனர்.

இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும், ஆடைத் தொழிற்சாலைகளிலும், சுயதொழில்களிலும், ஈடுபட்டுள்ளதாகவும், மேஜர் ஜெனரல் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version