அல்­லது சூதாட்டம் தொன்று தொட்டு பல்­வேறு பெயர்­களால் அழைக்­கப்­ப­டு­கின்­றது.இந்த சூதாட்டத்தால் தங்கள் வாழ்வை ஏன் இராச்­சி­யங்­களைக் கூட இழந்­த­வர்கள் பற்றி கேள்­விப்பட்டுள்ளோம்.

அந்­த­வ­கையில் இன்­றைய கால கட்­டத்தை பொறுத்­த­வரை சூதாட்­டத்தின் நவீன வடிவம் தான் ‘கசினோ’. சூதாட்ட விளை­யாட்­டுகள்.

அதுவும் இலங்­கையில் அண்­மைக்­கா­ல­மாக மிக பிர­பல்­ய­மான ஒரு பொழு­து­போக்கு அம்­ச­மா­கவும், விநோத விளை­யாட்­டா­கவும் ‘கசினோ’ சூதாட்ட நிலை­யங்கள் மாறி­வ­ரு­கின்­றன.

அதுவும் ‘கசினோ’ சூதாட்ட விளை­யாட்­டுக்­க­ளுக்­காக பாரி­ய­ளவில் பணத்தை வாரி இறைக்கும் வெளி­நாட்­ட­வர்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது.

அந்­த­வ­கையில் ‘கசினோ’ விளை­யாட்டில் காணப்­பட்ட அதீத ஈடு­பாடு கார­ண­மாக இலங்­கைக்கு வந்த இந்­திய தம்­ப­திகள் இருவர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் வெள்ளவத்தைப் பகு­தியில் கடந்த 3ஆம் திகதி பதி­வா­னது.

எனவே, இச்­சம்­பவம் தொடர்­பாக பல்­வேறு சந்­தே­கங்­களின் அடிப்­ப­டையில் வெள்ளவத்தை பொலிஸார் இது­வரை நடத்­திய விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் பல விட­யங்கள் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன.

அந்­த­வ­கையில் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் உயி­ரி­ழந்த மும்­பாயைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட துட்­விராம் பொட்தா என்ற 31வய­து­டைய ஆணும், தமிழ்­நாடு சென்­னையைப் பிறப்­பி­ட­மாக கொண்ட மகாலக் ஷ்மி என்ற 27வய­து­டைய பெண்ணும் சிறந்த கல்வி பின்­ன­ணியைக் கொண்­ட­வர்கள்.

இரு­வரும் திரு­ம­ண­மாகி தொழில் நிமித்தம் மலே­ஷி­யாவில் குடி­யே­றி­ய­துடன், அங்கு பொறுப்­பு­மிக்க உயர் பத­வி­யொன்றில் பணி­பு­ரி­ப­வர்­க­ளா­கவும் இருந்து வந்த நிலையில் தான் ‘கசினோ’ சூதாட்­டத்தில் காணப்­பட்ட ஈடு­பாடு கார­ண­மாக கடந்த மாதம் 27ஆம் திகதி சுற்­றுலா விசாவில் இலங்­கைக்கு வந்திருந்­தார்கள்.

அது­மட்­டு­மின்றி, இலங்­கையில் காணப்­பட்ட பிர­பல ‘கசினோ’ சூதாட்ட நிலை­யத்தின் உரிமையாளர்களுடன் மிக நெருங்­கிய தொடர்­பி­னையும் பேணியும் வந்­துள்­ளார்கள்.

  hotelஇதனால் இலங்­கைக்கு வந்த இரு­வ­ருக்கும் சிறந்த ஹோட்­ட­லொன்­றினைத் தெரிவு செய்து கடந்த 27ஆம் திக­தி­யி­லி­ருந்து   31ஆம் திகதி வரை ஹோட்­ட­லுக்­கு­ரிய கட்­ட­ணத்­தையும் செலுத்தி அங்­கி­ருந்து ‘கசினோ’ விளை­யாட்­டு­க­ளுக்குச் செல்­வ­தற்­கான சகல போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளையும் ‘கசினோ’ நிலையமே செய்­து­கொ­டுத்­துள்­ளது..

அதன்பின் இரு­வ­ருமே பெரும்­பா­லான நேரத்தை ‘கசினோ’ நிலை­யத்­தி­லேயே செல­வ­ழித்­தனர்.

இறு­தி­யாக ஏப்ரல் 1ஆம் திகதி காலையில் வெளியில் சென்­ற­வர்கள் மீண்டும் இரவு 8 மணியளவிலேயே ஹோட்டல் அறைக்கு வந்­தி­ருக்­கின்­றார்கள்.

எனினும், அதற்கு பின்னர் எக்­கா­ர­ணத்தை கொண்டும் அறை­யி­லி­ருந்து அவர்கள் இரு­வரும் வெளியில் வர­வில்லை.

குறைந்­தது அன்­றைய தினத்­துக்­கான உண­வினைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காகக் கூட ஹோட்டல் அறையி­லி­ருந்து வெளியில் வர­வில்லை.

மொத்­தத்தில் அந்த அறையில் இருவர் இருக்­கின்­றார்கள் என்­ப­தற்­கான எந்­த­வொரு அறி­கு­றியும் தென்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் தான் ஏப்ரல் இரண்டாம் திகதி மாலை 6 மணி­ய­ளவில் அறையை சுத்தம் செய்­வ­தற்­காக ஹோட்­டலில் பணி­பு­ரியும் இளைஞன் கதவைத் தட்­டி­யி­ருக்­கின்றான்.

எனினும், வெகு நேர­மா­கியும் எந்­த­வி­த­மான பதிலும் கிடைக்­காமை கார­ண­மாக குறித்த இளைஞன் இது தொடர்­பாக தனது மேல­தி­கா­ரி­க­ளிடம் முறை­யிட்­டுள்ளான்.

இதனைத் தொடர்ந்து அவர்­களும் வந்து அறைக் கதவை திறக்க முற்­பட்ட போதும் அறையின் கதவு உள்ளே தாழ்ப்­பா­ளிட்­டி­ருந்­தது.

எனவே இனியும் பொறுக்­க­மு­டி­யாது அறையின் உள்ளே ஏதோ அசம்­பா­விதம் நடந்­தி­ருக்க வேண்டும் என்ற சந்­தே­கத்­துடன் ஹோட்டல் நிர்­வா­கத்­தினர் மேற்­படி சம்­பவம் தொடர்­பாக தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் வெள்ளவத்தை பொலி­ஸா­ருக்கு அறி­வித்­தனர்.

இதனைத் தொடர்ந்து ஹோட்டல் நிர்­வா­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்து கிடைத்த தொலை­பேசி அழைப்­பை­ய­டுத்து இரவு 7 மணி­ய­ளவில் சம்­பவ இடத்­துக்கு விரைந்த வெள்ளவத்தை பொலிஸார் தனது ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

இதன் போது ஹோட்டல் நிர்­வா­கத்­தி­னரின் உத­வி­யுடன் இரு­வரும் தங்­கி­யி­ருந்த அறையை திறந்த போதே இரு­வரும் உயி­ரற்ற நிலையில் கிடந்­துள்ளனர்.

இரு­வரும் இறு­தி­யாக முதலாம் திகதி வெளியில் செல்லும் போது அணிந்­தி­ருந்த ஆடை­யுடன், மனைவியின் வயிறு பெரி­தாக கழுத்து வரை போர்­வை­யினால் மூடி, சாதா­ர­ண­மாக படுத்­தி­ருப்­பது போல் உயி­ரற்ற நிலையில் கிடக்க, அவ­ளது அருகில் அதே கட்­டிலில் கணவன் உயி­ரற்று கிடந்துள்ளார்.

அது­மட்­டு­மின்றி, மனைவி எட்டு மாத கர்ப்­பி­ணி­யா­க­வி­ருந்­த­துடன், அறையில் சாதா­ரண ஆடை பையொன்றும், இரண்டு கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­களும், இரு­வ­ரி­னதும் கட­வுச்­சீட்­டுக்­களும் காணப்பட்­டுள்­ளன.

மேலும் பணம் என்று சொல்­வ­தற்கு மலே­ஷியா பணம் 10 ரிங்கிட் நாண­ய­மொன்று மாத்­தி­ரமே காணப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு பாதி குடித்து வைத்த கொக்­கோ­கோலா போத்­த­லொன்றும், இரண்டு கண்­ணாடி குவ­ளையும் அதன் அருகே காணப்­பட்­ட­துடன், அதிக விஷத் தன்மை வாய்ந்த நஞ்சுப் போத்­த­லொன்றும் காணப்பட்டது.

எனவே குளிர்­பா­னத்தில் விஷம் கலந்து தற்­கொலை செய்­து­கொள்ள முயற்­சித்­தி­ருக்க வேண்டும் என்று பொலிஸார் சந்­தே­கித்­தனர்.

இத­னை­ய­டுத்து, காலை நீதிவான் சம்­பவ இடத்­துக்கு வந்து பார்­வை­யிட்­டதைத் தொடர்ந்து சட­லங்கள் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் பரி­சோ­த­னை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன.

இதனைத் தொடர்ந்து இந்­திய தூத­ர­கத்தின் ஊடாக இந்­தி­யாவில் வசிக்கும் இவர்­களின் உறவினர்களுக்கு  இவர்­களின் மரணம் தொடர்­பாக அறி­விக்­கப்­பட்­ட­துடன், இவர்­களின் மர­ணத்­துக்­கான கார­ணத்தை பல்­வேறு கோணங்களில் தேட முயற்­சித்­தனர்.

அதன்­படி இரு­வரும் ‘கசினோ’ விளை­யாட சென்ற நிலை­யத்தில் மேற்­கொண்ட விசா­ர­ணையின் மூலம் ‘கசினோ’ விளை­யாட்டில் மிகுந்த அனு­ப­வமும், திற­மையும் கொண்­டி­ருந்ததாகவும், இவர்கள் இருவரும் இறு­தி­யாக 29,30,31ஆம் திக­தி­களில் மட்டும் சுமார் பல இலட்சம் ரூபாக்­களை கசினோ சூதாட்ட விளை­யாட்டில் தோற்­றுள்­ளதா­கவும்…,

கடை­சி­யாக முதலாம் திகதி இரவு தாம் தங்­கி­யி­ருக்கும் ஹோட்­ட­லுக்கு வழ­மை­யாகச் செல்லும் ‘கசினோ’ நிர்­வா­கத்­தி­னரின் வாக­னத்தில் தான் சென்று ஹோட்டல் வாசலில் இறங்­கி­ய­தா­கவும் அதற்கு பின்னர் அவர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்று தெரி­யாது என்றும் கசினோ நிலை­யத்­தினர் தெரிவித்­தனர்.

அது­மட்­டு­மின்றி, ‘கசினோ’ நிர்­வா­கத்­தினர் தமது சொந்த பணத்தில் முன்­கூட்­டியே இரு­வரும் தங்கியிருந்த ஹோட்­ட­லுக்கு பணம் செலுத்­தி­யி­ருப்­பது    இவர்கள் இருவர் மூலம் கசினோ நிர்வாகத்தி­ன­ருக்கு பாரிய இலாபம் கிடைக்கும் என்ற நோக்­குடன் இருக்­கலாம் என்ற சந்­தே­கமும் பொலி­ஸா­ருக்கு ஏற்பட்டுள்­ளது.

‘கசினோ’ விளை­யாட்டில் ஏற்­பட்ட பாரிய நிதி­யி­ழப்பு கார­ண­மா­கவே தற்­கொ­லை செய்திருக்க வேண்டும் என்று பல்­வேறு சந்­தே­கங்கள் பொலிஸ் தரப்­பி­லி­ருந்து எழுந்­துள்ள நிலையில் மேல­திக விசா­ர­ணை­களை வெள்ளவத்தை பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

எது எவ்­வா­றா­யினும், நன்கு படித்து பொறுப்­பு­மிக்க உயர் பத­வி­களை வகித்த அழ­கிய இளம் தம்­ப­தி தங்க­ளது திற­மையின் மீதும், உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் முன்னேறாமல் வெறும் பொழுது போக்கு அம்சங்களுக்கும், களியாட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இறுதியில் தம் உயிரை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version