பதுளை – கொஸ்லாந்த பிரதேசத்தில் உள்ள தியலும நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் மற்றும் யுவதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 nirvilsi-1

17 வயதுடைய இருவரும் நேற்று நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்துள்ளநிலையில் நேற்றைய தினம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டதுடன் இன்று இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப முறுகல் காரணமாகவே அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் தற்கொலை செய்ய முன்னர் உறவினர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இவர்கள் தமது நிலைமை பற்றி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொஸ்லந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version