அகமதாபாத்: குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்.பி. பூனம்பென் நடனம் ஆடிய 30 வினாடிகளில் பார்வையாளர்கள் ரூ.3 கோடி நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வெராவலில் பகவத் கதா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

poonam_1933137gஅந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. பூனம்பென் கலந்து கொண்டார். ஜாம்நகர் பகுதியில் இருந்து எம்.பி. ஆன அவர் பகவத் கதா நிகழ்ச்சியில் பலருடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

அவர் நடனம் ஆடத் துவங்கியதை பார்த்ததும் பார்வையாளர்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை அவரை நோக்கி பறக்க விட்டனர்.

வெறும் 30 வினாடிகளில் ரூ.3 கோடி நோட்டுகள் பறக்கவிடப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த இடத்தில் பணக் குவியலாக இருந்தது.

41 வயதாகும் பூனம்பென்னின் தந்தை 1972ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 4 முறை சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

ஒரு பெண் எம்.பி. நடனமாடியதை பார்த்து ரூ.3 கோடி நோட்டுகள் பறக்கவிடப்பட்டது பலரையும் வியக்க வைத்துள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version