ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 2ஆவது பெரிய நகரம் பார்சிலோனா அங்குள்ள ஒரு பாடசாலையின் வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்த போது ஆசிரியர் வகுப்பிற்கு வந்தார்.

அப்போது 13 வயது மாணவன் திடீரென தான் வைத்திருந்த வில்லில் அம்பு ஏற்றி சரமாரியாக எய்தான் இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் அம்பு பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார் அவர் தவிர மேலும் 2 ஆசிரியர்களும், 2  மாணவர்களும் காயம் அடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்து வந்து அம்பு எய்த மாணவனை பிடித்தனர்.

அவரது பையை சோதனை செய்ததையடுத்து அதில் வில் அம்பு மற்றும் வெட்டுக்கத்தி என்பன இருந்துள்ளன, அவை ஆளை கொல்லும் ஆயுதம் என அவனுக்கு தெரியவில்லை.

எனவே, அவன் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அதை தொடர்ந்து அவனை மனநல காப்பகத்தில் அனுமதித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரை கொன்ற மாணவன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர், ஏனெனில் அவனுக்கு இன்னும் 14 வயது ஆகவில்லை.

ஸ்பெயின் பாடசாலைகளில் இது போன்ற தாக்குதல் மிகவும் அரிதாக நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் தற்போது நடந்த இத்தாக்குதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version