பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி தனது மகள் ஷிவாவை மைதானத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

கிரிக்கெட் மைதானத்திற்கு மகள் ஷிவாவை தோனி கொண்டு வருவது இதுவே முதல்முறை. மகள் வந்த நேரம், சென்னை அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பியது.

ராயல் சேலஞ்சர்ஸ்- சென்னை அணிகளுக்கிடையேயான இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 181 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 154 ரன்களில் ஆல்அவுட் ஆகியது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியை பொறுத்தரை மெக்கல்லம் போனாலும் ஸ்மித் போனாலும் சரி அணிக்கு எப்போதும் கைகொடுத்து அசத்துவது சுரேஷ் ரெய்னாதான்.

கேப்டன் தோனியின் நம்பிக்கை மிகுந்த நண்பரும் கூட. ஐ.பி.எல். போட்டிய் நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெக்கல்லம் 4 ரன்களில் வீழ்ந்து விட, அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.

shiva2எந்த வித பதட்டமும் இல்லாமல் நம்பிக்கையுடன் விளையாடினார். ரெய்னாவின் அதிரடியில் 4 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் பறந்தன.

சுரேஷ் ரெய்னா களமிறங்கும் போது, சென்னை அணி 12 ரன்கள் எடுத்திருந்தது. அவர் வெளியேறும் போது சென்னை அணி 124 ரன்களை அதிரடியாக குவித்திருந்தது. சுரேஷ் ரெய்னா 32 பந்துகளில் 62 ரன்களை எடுத்து வெளியேறினார்.

அதுபோல், ஸ்மித்தின் அதிரடியையும் பாராட்டாமல் இருக்க முடியாது. எல்லால போட்டியிலும் குறிப்பிடத்தக்க ரன்களை அவர் அடித்துக் கொடுத்து விடுகிறார். நேற்று 29 பந்துகளில் 39 ரன்களை அவர் எடுத்தது சென்னை அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது.

நேற்று போட்டி நடந்த சின்னசாமி மைதானத்திற்கு தோனி தனது மகள் ஷிவாவை கொண்டு வந்திருந்தார். 2 மாத கைக்குழந்தையான ஷிவாவை தோனி மைதானத்திற்கு கொண்டு வருவது இதுவே முதல் முறை.

போட்டி தொடங்கியதும் தோனியின் மனைவி சாக்ஷியின் கையில் தவழ்ந்து கொண்டிருந்த ஷிவாவை அடிக்கடி கேமராக்கள் காட்டிக் கொண்டிருந்தன.

மைதானததிற்கு கேப்டன் மகள் வந்த நேரம், அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியதாக சென்னை அணயின் ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version