தன்னை காதலிப்பதாக கடிதம் எழுதித்தரக் கூறி, இளம்யுவதியொருவரை கட்டிப்பிடித்த ஆசாமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான இந்த ஆசாமியின் திருதாளங்களை அறிந்த மனைவி மயக்கம் போட்டு விழுந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பரபரப்பு சம்பவம் வடமராட்சியின் பொலிகண்டியில் நடந்துள்ளது.

பொலிகண்டி குழந்தை யேசு ஆலயத்தை அண்மித்த பகுதியில் கடந்த 20ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலாலியிலிருந்து இடம்பெயர்ந்து பொலிகண்டியில் வசித்துவரும் இளம் பெண்ணே ஆசாமியின் “காதல்பிடியில்” சிக்கி திக்குமுக்காடியுள்ளார்.

சம்பவ தினத்திலன்று இந்த யுவதி குழந்தையேசு ஆலயத்திற்கு வழிபட சென்றுள்ளார். யுவதிக்காக நீண்டநேரம் காத்திருந்த ஆசாமி, யுவதியை வழியில் மடக்கி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆசாமி இந்த யுவதியின் உறவுக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை காதலிப்பதாக கடிதம் எழுதித்தா என கூறி வீட்டிற்குள் வைத்து கண்டபடி கட்டிப்பிடித்து முத்தமிட ஆரம்பித்துள்ளார்.

இந்த சமயத்தில் ஆசாமியின் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் பருத்தித்துறையிலுள்ள தமது உறவினர் ஒருவரது மரணவீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அந்த சமயத்தில் தனது திருகுதாளத்தை நடத்தி முடித்துள்ளார்.

ஆசாமியின் காட்டுத்தனமாக முத்ததத்தை தாங்க முடியாத யுவதி ஒருவாறு அவரது பிடியிலிருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடிச் சென்றுவிட்டார். சம்பவத்தை பெற்றோரிடம் விபரித்ததையடுத்து, வல்வெட்டித்துறை பொலிசாரிற்கும் அறிவிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை பொலிசார் ஆசாமியின் வீட்டிற்கு சென்று, ஆசாமியை வீட்டின் வெளியில் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

என்ன ஏதென அறிய மெதுவாக அவர்களின் பின்னால் வந்த ஆசாமியின் மனைவி, விடயத்தை கேட்டு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். உடனடியாக அவர் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version