கடந்த மாத இறு­தியில் சீன – இலங்கைப் படை­யி­ன­ருக்கு இடையில் ஆரம்­பிக்­கப்­பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்­தி­ருக் கும் பெயர் ‘பட்­டுப்­பாதை ஒத்­து­ழைப்பு -2015′ என்­ப­தாகும்.

சீனா தனது கனவுத் திட்­ட­மான பட்­டுப்­பாதைத் திட்­டத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்கு பெரு­ம­ளவு வளங்­களை ஒதுக்கி பல்­வேறு நாடு­க­ளையும் தன்­பக்கம் திருப்பி வரு­கி­றது.

அது முற்­றிலும் வணிக நோக்கம் கொண்ட திட்டம் என்றே சீனா­வினால் கூறப்­பட்டு வந்­தாலும், அதன் பின்னால் மிகப்­பெ­ரிய இரா­ணுவ ஆதிக்க நோக்கம் ஒளிந்து கிடப்­ப­தாக பொது­வான விமர்­ச­னங்கள் உள்­ளன.

Silk-Road-Cooperation-2015-2இலங்­கையும் இந்த கடல்சார் பட்­டுப்­பாதை திட்­டத்தில் இணைந்து கொள்ள முன்­னைய ஆட்சிக்காலத்தில் ஒப்­புதல் வழங்­கி­யி­ருந்­தது. ஆனால், புதிய ஆட்சி அமைந்த பின்னர், பட்­டுப்­பாதை திட்டம் தொடர்­பான இலங்­கையின் நிலை என்­ன­வென்­பது தெளி­வற்­ற­தா­கவே இருக்­கி­றது.

எனினும், பட்­டுப்­பாதை ஒத்­து­ழைப்பு- 2015 (“Silk Road Cooperation -2015”) என்ற பெயரை இலங்கைப் படை­யி­ன­ரு­ட­னான போர்ப்­ப­யிற்­சிக்கு சீனா சூட்­டி­யி­ருப்­பது முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்­றாக கருதப்ப­டு­கி­றது.

முத­லா­வது, தனது பட்­டுப்­பாதை திட்டம் உல­க­ளா­விய செழிப்­பையும் வர்த்­தக விருத்­தி­யையும் மட்டுமே நோக்­க­மாக கொண்­டது என்று சீனா கூறி வந்­தி­ருக்­கி­றது.

குறிப்­பாக, இந்தத் திட்­டத்தின் மூலம் ஆசிய நாடுகள் செழிப்­ப­டையும் என்று ஆசை காட்டி வந்திருக்கிறது.

அதன் மூலமே இந்தத் திட்­டத்­துக்குள் பல நாடு­களைக் கவர்ந்­தி­ழுத்­தி­ருக்­கி­றது.

ஆனால் இதன் பின்னால் உள்ள இரா­ணுவ நோக்­கத்தை, போர்ப் பயிற்சி ஒன்­றுக்கு பட்­டுப்­பாதை ஒத்துழைப்பு என்று பெயர் சூட்­டி­யதன் மூலம் சீனா சந்­தேகம் கொள்ள வைத்­தி­ருக்­கி­றது.

அதுவும் தற்­போ­தைய தரு­ணத்தில், இப்­ப­டி­யா­ன­தொரு பெய­ருடன் நடத்­தப்­படும் போர்ப் பயிற்­சியில் ஈடு­ப­டு­வது குறித்து இலங்கை அர­சாங்கம் கூட சற்று சங்­க­டத்­துக்கு உள்­ளா­கி­யி­ருக்கக் கூடும்.

இந்­தியா,அமெ­ரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுடன் சீரான உறவைப் பேணவும், எந்த தரப்பையும் சாராமல் செயற்­ப­டவும் எத்­த­னிக்கும், இலங்கை அர­சாங்­கத்­துக்கு, சீனாவின் இந்தப் பெயர் சூட்டல் விருப்­பத்­துக்­கு­ரிய ஒரு விட­ய­மாக இருக்­காது.

பட்­டுப்­பாதை திட்டம் வணிக ரீதி­யா­ன­தல்ல, இரா­ணுவ நோக்­கத்­தையும் உள்­ள­டக்­கி­யது என்­ப­தற்கு, சீனாவின் இந்தப் பெயர் சூட்­டலே முதல் ஆதா­ர­மாகும்.

சீனாவில், அர­சியல், இரா­ணுவம், பொரு­ளா­தாரம் மட்­டு­மன்றி, இலக்­கி­யங் கள் கூட எல்­லாமே ஒரே இலக்­கினை நோக்கி ஒன்று குவிக்­கப்­பட்­டவை.

அந்த வகையில் தான், சாதா­ரண வணி கத் திட்டம் என்று வெளிப்­ப­டை­யாக கூறிக் கொள்­ளப்­பட்ட பட்டுப்­பாதை திட்­டத்தின் பெய­ரி­லேயே போர்ப் பயிற்­சி­யை யும் சீனா தொடங்­கி­யி­ருக்­கி­றது.

கடந்த ஆண்டு செப்­டெம்பர் மாதம் சீன ஜனா­தி­பதி ஜி ஜின்பிங் இலங்­கைக்கு மேற்­கொண்ட பய­ணத்தின் போது, பாது­காப்புத் தொடர்­பான உடன்­பாடு ஒன்றும் செய்து கொள்­ளப்­பட்­டது.

அது­பற்­றிய முழு­மை­யான விப­ரங்கள் அப்­போது வெளி­யி­டப்­பட்­டி­ருக்­க­வில் லை.

அந்த உடன்­பாட்டில் இடம்­பெற்ற கூட் டுப் போர்ப்­ப­யிற்­சி­களை மேற்­கொள்ளும் திட்­டத்தின் கீழ் தான், இந்தப் போர்ப் பயிற்­சிகள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

இலங்­கையில், விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போருக்கு சீனா ஆயு­தங்­களை வழங்கி உதவி செய்திருந்­தது.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், சீன பாது­காப்பு உயர்­மட்­டங்கள் தொடர்ச்­சி­யாக இலங்­கைக்கு மேற்கொண்ட பய­ணங்­களின் மூலம், இலங்கைப் படை­க­ளுடன் நெருக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இலங்கை – சீனப் படை­யி­ன­ருக்கு இடை யில் பயிற்­சிகள், ஒத்­தி­கைகள் போன்­ற­வற்றை அதி­க­ரிப்­பதன் மூலம், இரு­த­ரப்பு உற­வு­களை புதிய கட்­டத்­துக்கு கொண்டு செல்ல சீனா முடி­வெ­டுத்­தி­ருந்­தது.

கடந்த மூன்று, நான்கு ஆண்­டு­க­ளாக, கொழும்பு, திரு­கோ­ண­மலை உள்­ளிட்ட நக­ரங்கள், சீன ஜெனரல்களின் பயணத் திட்­டத்தில் முக்­கி­ய­மான இடங்­க­ளாக இருந்து வந்­ததை தெளி­வாக அவதானித்­தி­ருக்­கலாம்.

இந்தப் பய­ணங்­களின் போதும், சீன ஜனா­தி­ப­தியின் பய­ணத்தின் போதும், இலங்கைப் படை­யி­ன­ருக்கு சீனாவில் பயிற்சி வச­தி­களை அதி­க­ரிக்­கவும், கூட்டுப் போர்ப் பயிற்­சி­களை மேற்­கொள்­ளவும் இணக்கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டி­ருந்­தன.

இலங்கைப் படை­யி­ன­ருக்குப் பயிற்சி அளிப்­ப­தற்­கான இடங்­களை அதி­க­ரித்­துள்ள சீனா, இலங்கைப் படை­யி­ன­ரு­ட­னான பயிற்­சி­களின் மூலம், தானும் புதிய அனு­ப­வங்­களைக் கற்றுக் கொள்ள முனைகிறது.

விடு­தலைப் புலிகள் இயக்­கத்­துக்கு எதி­ரான வெற்­றி­க­ர­மாக செயற்­பட்ட இலங்கைப் படை­யி­னரின் அனு­ப­வங்கள் சீனா­வுக்கு இப்­போது தேவைப்­ப­டு­கி­றது.

கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே, இலங்­கையில் நடத்­தப்­படும், போர்ப் பயிற்­சிகள், பாது­காப்புக் கருத்­த­ரங்­கு­களில் சீனா முழு­மை­யாகப் பங்­கேற்று வந்­தி­ருக்­கி­றது.

குறிப்­பாக, இலங்­கையின் சிறப்புப் படைப்­பி­ரி­வுகள், கடற்­படை விமா­னப்­ப­டை­யுடன் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும், “நீர்க்­காகம்” என்ற போர்ப் பயிற்­ சிக்கு சீனா தனது இரா­ணுவ அணி­களை அனுப்பி வரு­கி­றது.

 

அதே­வேளை, கடற்­படை, இரா­ணுவம் ஆகி­ய­வற்­றினால் ஒழுங்­கு­ப­டுத்­தப்­படும் பாது­காப்புக் கருத்தரங்கு­க­ளிலும் சீனா பங்­கேற்று வரு­கி­றது.

இதற்குப் பிர­தான காரணம், சீனா­வுக்கும், தீவி­ர­வாத அச்­சு­றுத்­தல்கள் இருக்­கின்­றன.

குறிப்­பாக, வட­மேற்கில் உள்ள சீனாவின் மிகப்­பெ­ரிய மாகா­ண­மான ஜின்­ஜியாங் மாகா­ணத்தில், பல தீவி­ர­வாத தாக்­கு­தல்கள் நடந்­துள்­ளன.

பல இனக்­கு­ழுக்கள் வாழு­கின்ற ஜின்­ஜியாங் மாகாணம், பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், மொங்கோலியா, கச­கஸ்தான், கிர்­கிஸ்தான், தஜி­கிஸ்தான், இந்­தியா உள்­ளிட்ட நாடு­க­ளுடன் எல்லையைக் கொண்­டுள்­ளது.

இங்கு இஸ்­லா­மிய தீவி­ர­வாத அச்­சு­றுத்­தல்கள் இருப்­ப­துடன், அங்­காங்கே சில வன்­மு­றை­களும் திருக்கின்­றன.

இவற்றை சீனா இரும்புக் கரத்­துடன் அடக்க முயன்­றாலும், மத்­திய ஆசியா, மத்­திய கிழக்கு வழி­யாக தீவி­ர­வாதம் தனது நாட்­டுக்­குள்­ளேயும், நுழைந்து விடுமோ என்று சீனா கவலை கொண்­டுள்­ளது.

எனவே, தீவி­ர­வாத முறி­ய­டிப்புக் குறித்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களில் சீனா ஈடு­பட்டு வருகிறது.

அதனால் தான், விடு­தலைப் புலி­களை முற்­றாக அழிப்­பதில் வெற்­றி­கண்ட இலங்கைப் படை­களின் அனு­ப­வங்­களைப் பெற்றுக் கொள்­வது மற்றும், இலங்கைப் படை­க­ளுடன் இணைந்து போர்ப்பயிற்சிகளில் ஈடு­ப­டு­வதில் சீனா ஆர்வம் காட்டி வரு­கி­றது.

இந்­தியா உள்­ளிட்ட நாடு­களும் கூட இந்த விட­யத்தில், குறி­யா­கவே இருக்­கின்­றன என்­பது உண்மை.

பட்­டுப்­பாதை ஒத்­து­ழைப்பு-2015 என்ற பெயரில் சீனாவில் நடத்­தப்­பட்­டுள்ள 20 நாள் போர்ப் பயிற்­சி­யிலும் கூட, தீவி­ர­வாத முறி­ய­டிப்பு குறித்த பயிற்­சி­களே இடம்­பெற்­றுள்­ளன.

இலங்கை இரா­ணு­வத்தைச் சேர்ந்த 32 பேரும், சீனாவின் மக்கள் ஆயுத பொலிஸ் படையை சேர்ந்த 40 பேரு­மாக மொத்தம் 72 பேர் இந்தப் போர்ப் பயிற்­சியில் பங்­கெ­டுத்­தி­ருந்­தனர்.

சீனா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான பாது­காப்பு ஒத்­து­ழைப்புத் திட்­டத்தின் கீழ், இந்தப் புதிய போர்ப்­ப­யிற்­சியின் முதற்­கட்டம், கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி, சீனாவில் தென்­ப­கு­தியில் உள்ள குவாங்சோ இரா­ணுவப் பயிற்சித் தளத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

கடந்த 17ஆம் திக­தி­யுடன் இந்தப் போர்ப பயிற்­சிகள் நிறை­வ­டைந்­தன.

இரு­நாட்டுப் படை­களும் தத் தமது போராற்­றலைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் குறிப்­பாக, தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் தமது திறனை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கே இந்தப் போர்ப்­ப­யிற்­சியை மேற்­கொண்­டன.

ஒரு தரப்­பிடம் இருந்து மற்றத் தரப்பு கற்றுக் கொள்­வ­தற்கும், தீவி­ர­வாத முறி­ய­டிப்பில் தமது ஆற்றலை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கும் இந்தப் போர்ப்­ப­யிற்சி மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக, சீனாவின் பாது­காப்பு இணை­யத்­த­ள­மாக ‘சைனா மிலிட்­டரி’ ஒன்லைன் தெரி­வித்­தி­ருந்­தது.

மார்ச் 29ஆம் நாள் ஆரம்­பிக்­கப்­பட்ட முதற்­கட்ட பயிற்­சியின் போது, முன்­னேற்­ற­ம­டைந்­துள்ள நவீன தீவி­ர­வாத எதிர்ப்புச் செயற்­பா­டுகள் மற்றும் தந்­தி­ரோ­பாய பயிற்­சிகள் குறித்துக் கவனம் செலுத்­தப்­பட்­டது.

தீவி­ர­வாத எதிர்ப்பு ஒத்­தி­கையின் போது, சுடுதல், கைப்­பற்­றுதல், ஏறுதல் ஆகிய விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

தந்­தி­ரோ­பாயப் பயிற்­சி­களில், பிர­தா­ன­மாக, கட்­ட­டங்­களில் தேடுதல் நடத்­துதல், பணயக் கைதிகள் மீட்பு, விமான, பஸ் கடத்­தல்­கா­ரர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை ஆகி­யன உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­த­தாக, சீன மக்கள் விடு­தலை இரா­ணு­வத்தின் பயிற்சித் திணைக்­க­ளத்தின் பிரதி பணிப்­பாளர் சூ ஹய்ஹூய் தெரி­வித்­தி­ருந்தார்.

சீன- இலங்கைப் படை­க­ளுக்கு இடை­யி­லான இந்தப் போர்ப்­ப­யிற்­சியின் இரண்­டா­வது கட்டம், வரும் ஜுன் மாதம் இலங்­கையில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இதில் பங்­கேற்­ப­தற்­காக, சீன இரா­ணு­வத்தின் பல விசேட நட­வ­டிக்கைக் குழுக்கள் இலங்கைக்கு வரவுள்­ளன.

இந்த இரண்­டா­வது கட்ட ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015′ போர்ப்பயிற்சியில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் படைப்பிரிவுகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைப் படைப்பிரிவுகள் பங்கேற்கவுள்ளன.

இவையே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கியமான பங்கை ஆற்றியிருந்தன.

இதற்கிடையே, இந்தப் போர்ப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, முடியும் வரை, இதுபற்றிய தகவல்களை இலங்கை அரசாங்கமோ, இராணுவமோ வெளியில் மூச்சுக் கூட விடவில்லை.

தற்போதைய நிலையில், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இலங்கை அரசாங்கம் இதனை மறைத்திருக்காது. அதற்கான அவசியமும் இல்லை.

அதேவேளை, இன்றைய நவீன உலகில் போர்ப் பயிற்சிகள் என்பது, நேசநாடுகளுக்கு இடையில் மட்டுமன்றி, பகை நாடுகளுக்கு இடையில் கூட மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் இதனை மறைக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனாலும் மறைக்க முயன்றுள்ளது – இது எங்கோ இலங்கைக்கு அழுத்தங்கள் உள்ளன என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version