தன் மகள் கார்த்திகா நாயருக்கு கார் ஓட்டத் தெரியும் என பொய் சொல்லி வா படத்தின் வாய்ப்பை வாங்கியுள்ளார் நடிகை ராதா. ஆனால் ஷூட்டிங் வந்த பிறகுதான் கார்த்திகாவுக்கு பிரேக் எது, ஆக்ஸிலேட்டர் எது? என்பது கூடத் தெரியவில்லையாம்!இந்தத் தகவலை பகிரங்கமாக வெளியிட்டார் படத்தின் நாயகனான அருண் விஜய். வா படத்தை ரத்தின சிவா இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இசை வெளியீடு
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, எஸ்.பி.ஜனநாதன், ஏ.வெங்கடேஷ், ரேணிகுண்டா இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அருண் விஜய்
இந்த விழாவில் நடிகர் அருண் விஜய் பேசும்போது, இந்த படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போது கார்த்திகா காரை ஓட்டுவதுபோலவும், நானும், சதீஷும் அந்த காரில் பயணிப்பதுபோலவும் படமாக்க திட்டமிட்டிருந்தோம்.இயக்குனர் கார்த்திகாவிடம் டயலாக் எல்லாம் சொல்லிவிட்டு படப்பிடிப்பை நடத்த தயாரானார். அவரும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, நடிக்க தயாராக இருந்தார். அப்போது, கார்த்திகா நாயர் என்னிடம் காரின் கியரை எப்படி போடுவது என்று கேட்டார். அதைக் கேட்டதும் நானும், சதீஷும் ஷாக் ஆகிவிட்டோம்.
Karthika-Nair-e1303517569519-659x860பொய் சொன்ன ராதா கார் ஓட்டத் தெரியாதவரை வைத்து இந்த காட்சியை எப்படி எடுப்பது என்று குழம்பி இயக்குனரிடம் கேட்டோம்.
அவர், படம் ஆரம்பிப்பதற்கு முன்பே, கார்த்திகாவின் அம்மா ராதாவிடம் இந்த படத்தில் கார் ஓட்டுவது போன்று காட்சி இருக்கிறது என்று விளக்கி கூறியதாகவும், அதற்கு ராதா, கார்த்திகாவுக்கு நன்றாக கார் ஓட்டத் தெரியும் என்று கூறியதாகவும் எங்களிடம் கூறினார்.

கார் ஓட்டத் தெரியவில்லை ஆகையால், கார்த்திகா சும்மா தமாஷுக்காகத்தான் அப்படி சொல்கிறார் என்று நினைத்து படப்பிடிப்பை தொடங்கினோம். ஆனால், உண்மையிலேயே கார்த்திகாவுக்கு கார் ஓட்டத் தெரியவில்லை.

விபத்திலிருந்து தப்பினோம்
படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது கார்த்திகா காரில் உள்ள பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார். உடனே கார் தாறுமாறாக ஓடியது.உடனே நான் சுதாரித்து காரை ஒருவழியாக நிதானத்துக்கு கொண்டுவந்து விட்டேன். ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பினோம் என்றுதான் சொல்லவேண்டும்,” என்றார்.
Vaa Deal Audio Launch

Share.
Leave A Reply

Exit mobile version