ஹைதராபாத்: செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தை வைத்து தெலுங்கு தயாரிப்பாளர் மஸ்தான் வலியும், நடிகை நீத்து அகர்வாலும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டத்தை தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து செம்மர கட்டைகள் கடத்துவதை தடுக்க அம்மாநில காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு, காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரம் கடத்தி வந்த சரவணன், சுரேஷ், ஆனந்த், அரி உள்பட 5 பேரை கைது செய்ததோடு, செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். கார் டிரைவர் சந்திரா தப்பி சென்றுவிட்டார்.

இதில் சரவணன் என்பவர் தமிழர் நடிகர் ( பருத்தி வீரன் சரவணன் அல்ல) என்று தெரியவந்தது.

மேலும் சென்னையில் உள்ள நடிகர் சரவணனின் 2 குடோன்களில் ஆந்திர காவல்துறையினர் நடத்திய சோதனையில், 165 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்தனர்.

சரவணன் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய ரவி, சண்முகம் கைது செய்யப்பட்டனர். இவர்களின் குடோனில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள செம் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்தான் வலி, அவரது சகோதரர் சங்கர்நாயக் ஆகியோர் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மஸ்தான் வலியை காவல்துறையினர் கைது செய்தனர்.

23-1429767745-neetu-agarwal-red-sanders-case2-600
அப்போது, மஸ்தான் செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் சினிமா படம் தயாரிப்பில் ஈடுபட்டதும், அவரது படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நீத்து அகர்வாலை காதலியாக வைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தியதும் தெரியவந்தது.

மேலும் செம்மரக் கடத்தலில் நடிகை நீத்துவுக்கும் தொடர்பு இருப்பதும், நடிகை நீத்துக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள பங்களாவை மஸ்தான்வலி கட்டி கொடுத்துள்ளதாகவும், அதில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மஸ்தான் வலி செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தை நடிகை நீத்துவிடம் கொடுத்து, அவரது வங்கி கணக்கில் போட்டுள்ளார்.

பின்னர் வங்கி கணக்கில் இருந்து தனக்கு தேவைப்படும் போது தேவையான பணத்தை எடுத்து இருக்கிறார் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவாக உள்ள நடிகை நீத்து அகர்வால், பெங்களூரு அல்லது மும்பையில் பதுங்கி இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுவதால் அவரை பிடிக்க தனிப்படைகள் அங்கு விரைந்துள்ளன.

மஸ்தான் வலி தெலுங்கில் ‘பிரேம பிரயாணம்’ என்ற படம் தயாரித்துள்ளார். அதில் நீத்து அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version