குஜராத்தில் காதலித்து ஊரைவிட்டு ஓடிய இளம்பெண் மற்றும் வாலிபருக்கு பஞ்சாயத்தார் வினோத தண்டனை வழங்கியுள்ளனர்.

சோட்டா உதய்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள தேவாலியா என்ற பழங்குடியின கிராமத்தில், 17 வயது இளம்பெண் ஒருவரும்,  18 வயது இளைஞரும்  ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு ஓட முயன்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள், ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் இருவரையும் பிடித்து ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து விசாரணை செய்த பஞ்சாயத்தார், அவர்கள் இருவரையும் ஊர் மக்களின் முன்னிலையில் ஒருவர் காதை மற்றொருவர் பிடித்துக் கொண்டு முட்டி போட வேண்டும் என்று தண்டனை வழங்கியுள்ளது.

அது மட்டுமல்லாமல், அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாயும், இளைஞரின் குடும்பத்தினரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளனர்.

பொலிசாரிடம் இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பஞ்சாயத்து செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 5 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version