சர்வதேச அளவில் 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சியான நாடாக சுவிட்சர்லாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
இதோ அவற்றின் மெய்சிலிற்க வைக்கும் பட்டியல்:
1.சுவிஸ் மக்கள் பணக்காரர்கள்
சுவிட்சர்லாந்து நாட்டின் தனி நபரை ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 58 ஆயிரம் டொலர்கள் ஆகும். பிரித்தானியாவில் 40 ஆயிரம் டொலர்கள் தான்.
சுவிஸ் மக்கள் சராசரியாக 82.8 வயது வரை உயிர் வாழ்பவர்கள். இதன் மூலம் சர்வதேச அளவில் அவர்கள் 10வது இடத்திலும் பிரித்தானியா மக்கள் 28வது இடத்திலும் உள்ளனர்.
சொக்லெட் தயாரிப்புக்கு பெயர் போன நாடு எது என்றால், அது சுவிட்சர்லாந்து தான் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் தயாரிக்கும் தனித்துவமான சொக்லெட்டுகள் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுவை மிக்க சொக்லெட்டை உண்டாலும், சுவிஸ் மக்கள் அதிக எடையுடன் வளர்வது கிடையாது. ஐரோப்பிய நாடுகளிலேயே 9 சதவிகித குறைந்த அளவில் உடல்பருமன் உள்ளவர்களே சுவிஸில் காணப்படுகின்றனர்.
டென்னிஸ் விளையாட்டு என்றால் ரோஜர் பெடரரை யாராலும் மறக்க முடியாது. சர்வதேச அளவில் சுவிஸிற்கு புகழ்தேடி தந்த அவர் ஒரு சுவிஸ் குடிமகன்.
கடந்த 1847ம் ஆண்டிலிருந்து எந்த போரிலும் பங்கேற்காத, அல்லது ஆதரவு தராத நாடு சுவிஸ். ராணுவத்திற்காக மில்லியன் கணக்கில் செலவு செய்வது இல்லை. சுவிஸ் மக்கள் அமைதி விரும்பிகள்.
பெரும்பாலான சுவிஸ் மக்கள் ஜேர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் புலமை பெற்றவர்கள்.
அதிக அளவு வருமானம் பெற்றாலும், சுவிஸ் மக்கள் அலுவலகங்களில் பணி செய்யும் நேரம் வாரத்திற்கு 35.2 மணி நேரம் தான். இது பிரித்தானியா-36.4, ஸ்பெயின்-38, கிரீஸ்-42.1, துருக்கி-48.9 மணி நேரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு ஆகும்.
சுவிட்சர்லாந்து நாடு முழுவதும் ஆல்ப்ஸ் மலைகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகள் சூழ்ந்துள்ளது அவர்களின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமைந்துள்ளது.
மருத்துவ சிகிச்சைகளுக்காக காத்திருப்பு நேரம்(Waiting for Appointment) மிகவும் குறைவு என்பதால் சுவிஸ் மருத்துவமனைகளில் சேவைகள் உலகளவில் தலை சிறந்ததாக கருதப்படுகிறது.
அதனால் தான் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு சுவிஸின் ஜெனிவாவில் அமைந்துள்ளது.
சுவிஸ் மக்கள் தொகை சுமார் 8 மில்லியனாக இருந்தாலும், சுமார் 25 நோபல் பரிசு வல்லுனர்களை சுவிட்சர்லாந்து உருவாக்கியுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜேர்மனியில் பிறந்திருந்தாலும், அவர் படிப்பை தொடங்கியது சூரிச் கல்லூரியில் தான். அவருடைய தலைச்சிறந்த ‘சார்பியல் தத்துவத்தை’(Theory of Relativity) பெர்ன் நகரில் உள்ளபோது தான் வளர்த்துக்கொண்டார்.
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்து பெண் ‘ஜேம்ஸ் பாண்ட்’ என பெயர் பெற்ற Ursula Andress பிறந்தது சுவிஸ் தான்.
சுவிஸ் ஜனநாயக நாட்டில் சாதாரண குடிமகன் கூட அரசியலமைப்பு திருத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கலாம். எந்த சட்டம் குறித்தும் வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் சுவிஸ் மக்களுக்கு உண்டு. இதனால் தான் 26 மண்டலங்களும் சிறந்த வகையில் தன்னாட்சியை நடத்தி வர முடிகிறது.
சுவிஸ் நாட்டில் பெருமளவில் ஏரிகள் உள்ளதால், பொழுதுபோக்கிற்காக ஏரிகளின் கரைகளில் அமர்வது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டில் வளம் வரும் ரயில்களில் பயணித்தால், சுவிஸின் ஒட்டுமொத்த அழகையும் பிரமிப்புடன் கண்டுகளிக்கும் வகையில் ரயில்களின் வடிவங்கள் அமைந்துள்ளன.
பல வகைகளில் ஆரோக்கியமான சீஸ்களை(Cheeses) உணவுகளில் பயன்படுத்துவதால், அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
அனைத்து வகையிலும் வாழ தகுதியான நகரங்களின் பட்டியலில் சூரிச் இரண்டாவது இடத்திலும், ஜெனிவா 8வது இடத்திலும், பெர்ன் 13வது இடத்திலும் உள்ளன.
சுவிட்சர்லாந்து சுவிஸ் கடிகாரங்களுக்கு மட்டும் பிரபலமானது அல்ல. எந்த காரியத்தையும் உரிய நேரத்தில் காலம் தவறாமல் செய்வதில் சுவிஸ் மக்கள் கெட்டிக்காரர்கள்.
கடைசியாக, செஞ்சிலுவை சின்னத்துடன் உலக புகழ்பெற்றிருக்கும் தேசிய கொடி சுவிஸ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ மிக முக்கிய காரணமாக திகழ்கிறது.