நேபாள நில நடுக்கத்தில் மண்ணுக்குள் புதையுண்ட 4 மாத ஆண் குழந்தையை மீட்புப் படையினர் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளனர்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடு வாசல்களை இழந்து உள்ளனர்.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில், பல நாட்டு ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


/p>

இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே பக்தபூர் பகுதியில் நேற்று சில வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, குழந்தையின் அழுகுரல் வீரர்களுக்கு கேட்டு உள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் வீரர்கள் மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். அப்போது, மண்ணுக்குள் புதையுண்டு குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.

பிறந்து 4 மாதமே ஆன அந்த குழந்தை இருந்த நிலையை கண்டு, மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சில வீரர்கள் கண்ணீர் விட்டுள்ளனர்.

child1உடனே, அந்த குழந்தையை மண்ணுக்குள் இருந்து வெளியே எடுத்தபோது அது வீறிட்டு அழுதுள்ளது. வீரர்கள் அந்த குழந்தையை சமாதானப்படுத்தி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தையின் பெயர் சோனித் அவால் என்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோரை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த குழந்தையை நேபாள மக்கள் ‘கடவுளின் குழந்தை’ என்று அழைக்கின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version