யாழ். மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசலின் கொடியிறக்க நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை அஷர் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். 12 நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ள இந்த கொடியேற்ற நிகழ்வு இறுதியில் நாட்டுக்காகவும் மக்களிற்காகவும் விசேட  துஆ பிராத்தனை வைபவமும் இடம்பெற்று சிறப்பாக முடிவடைந்தது.

இதன் போது வருகை தந்த மக்களிற்கு நாரிசா(அன்னதானம்) வழங்கப்பட்டதுடன் தாய் கொடி சம்பிரதாய பூர்வமாக இறக்கப்பட்டு மற்றுமொரு கொடி பறக்கவிடப்பட்டது.

கடந்த காலத்தில் நடைபெற்ற இத்தினத்தை விட ஏராளமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ரஜப் பிறை 1 உடன் ஆரம்பமாகி ரஜப்பிறை 12 உடன் இந்நிகழ்வு நிறைவடைந்துள்ளது.

unnamed2

Share.
Leave A Reply

Exit mobile version