வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தொடர்­பாக இந்­தி­யாவின் முக்­கி­ய­மான ஆங்கில நாளி­தழ்­களில் ஒன்­றான ‘ரைம்ஸ் ஒவ் இந்­தி­யா’வில் வெளி­யான செய்தி, அண்­மையில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அது ஒன்றும், அர­சியல் ரீதி­யான செய்­தி­யல்ல.

இந்­தி­யா­விலும், இலங்­கை­யிலும் பெரும் பர­ ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய வழக்­கொன்றில் தண்­டனை விதிக்கப்­பட்­ட­வர்­க ளின் விடு­தலை பற்­றிய செய்­தியே அது.

அதனால், அது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. எல்லா மட்­டங்­க­ளிலும் அது விவா­தங்­க­ளையும் எழுப்பி­யி­ருந்­தது.

1990களின் நடுப்­ப­கு­தி யில், தமிழ்­நாட்டில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய, பிரே­மா­னந்தா ஆசி­ரம வழக்குத்தான் அது.

தன்னைக் கடவுள் என்று கூறிக் கொண்ட பிரே­மா­னந்தா, திருச்­சியை அடுத்த

பாத்­திமா நகரில் நடத்தி வந்த ஆசி­ர­மத் தில், கொல்­லப்­பட்டு புதைக்­கப்­பட்ட ஒரு­வரின் சடலம் மீட்கப்பட்டதுடன், மேலும் 13 பெண்கள் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட சம்­பவம் அப்­போது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அந்த ஆசி­ர­மத்தை நடத்­திய பிரே­மா­னந்­தாவும் சரி, அவ­ருக்குத் துணை­யாக இருந்­த­தாக தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களும் சரி, அவரால் பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்ட 13 பெண்­களும் சரி இலங்கைத் தமி­ழர்­களே.

அந்த வழக்கில், பிரே­மா­னந்தா மற்றும் அவ­ருக்கு அடுத்த நிலையில் இருந்த கம­லா­னந்தா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்­ட­னையும், பாலேந்­திரா, சதீஸ்­குமார், நந்­த­குமார் ஆகிய மூவ­ருக் கும் தலா ஒரு ஆயுள்­தண்­ட­னையும் புதுக் ­கோட்டை நீதி­மன்­றத்­தினால் விதிக்­கப்­பட்­டது.

இந்த வழக்கு சென்னை உயர்­நீ­தி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்ட போது, தண்­டனை உறுதி செய்­யப்­பட்­ட­துடன், புது­டில்லி உச்ச நீதி­மன்­றத்தில் செய்­யப்­பட்ட மேன் முறை­யீடும் நிராகரிக்கப்பட்டது.

ஆயுள்­தண்­டனை அனு­ப­வித்து வந்த பிரே­மா­னந்தா நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இறந்­து­விட்டார்.

எஞ்­சியோர், கடந்த 20 ஆண்­டு­க­ளாக சிறையில் இருக்­கின்ற நிலையில் இன்­னமும் விடுதலையாகவில்லை.

இந்தக் கட்­டத்தில் தான், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும், இந்த வழக்கில் தண்­டனை பெற்றவர்களுக்கும் இடை யில் முடிச்சுப் போட்­டி­ருந்­தது ‘ரைம்ஸ் ஒவ் இந்­தியா.’

ஆயுள் தண்­டனை பெற்­றவர் மூவ­ரை யும் விடு­தலை செய்­யு­மாறு கோரி, இந்­தி யப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு, விக்­னேஸ்­வரன் கடிதம் எழு­தி­யுள்­ள­தாக அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

சாதா­ர­ண­மாக அந்தச் செய்தி வெளி­யா­கி­யி­ருந்தால் பர­வா­யில்லை.

விக்­னேஸ்­வரன் இலங்­கையின் உயர்­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ய­ரசர் என்­ப­தை யும் சுட்­டிக்­காட்டி, அவர் குற்­ற­வா­ளி­க ­ளுக்குத் துணை­போ­வது போன்றும், இந்­தி­யாவின் நீதித்­து­றையில் அவர் தலை­யீடு செய்வது போன்றும் கருத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தது இந்­திய நாளிதழ்.

அதை­விட, அவ­ரது இந்தக் கோரிக்கை, இந்­திய அதி­கா­ரி­க­ளுக்கு ஆச்­ச­ரி­யத்­தை யும், அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

இது முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு கடு­மை­யான நெருக்­க­டியை கொடுக்கும் வகையில் அமைந்­தி­ருந்­தது.

உட­ன­டி­யா­கவே, முத­ல­மைச்சர் செய­லகம், தாம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு அனுப்பியகடிதத்தின் பிர­தி­யுடன், மறுப்பை வெளி­யிட்­டது.

அதில், தண்­ட­னையை அனு­ப­விக்கும் குற்­ற­வா­ளி­களின் உற­வி­னர்கள் கையெ­ழுத்­திட்டு அனுப்­பிய கடிதத்­தையே- அவர்கள் தமது மாகா­ணத்தின் நியா­யா­திக்க எல்­லைக்குள் வசிப்­ப­வர்கள் என்­பதைக் கருத்தில் கொண்டு, இந்­தியப் பிர­ த­மரின் கவ­னத்­துக்கு அனுப்பி வைப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தார் முதலமைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன்.

இந்­தியப் பிர­த­ம­ருக்கு அனுப்­பிய கடி­தத்தின் பிர­தி­யுடன் அந்த மறுப்பு வெளி­யா­னதால் அந்த விவ­காரம் அத்­தோடு அமுங்கிப் போனது.

ஆனாலும், இந்த விவ­கா­ரத்தில், விக்­னேஸ்­வரன் இழுத்து வரப்­பட்ட பின்­ன­ணியும், அதற்­கான நோக்கங்­களும் ஆரா­யப்­பட வேண்­டி­யவை.

இந்த விவ­கா­ரத்தில் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தொடர்­பு­பட நேர்ந்­த­மைக்கு, முக்­கி­ய­மான ஒரு காரணம் உள்­ளது.

அது, அவர் பிரே­மா­னந்­தாவின் தீவி­ர­மான பக்தர் என்­ப­தே­யாகும்.

அவர் தேர்­தலில் போட்­டி­யிட்ட போது, ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில், தன்னை உணர வைத்­தவர் பிரே­மா­னந்­தாவே என்று குறிப்­பிட்­டி­ருந் தார்.

அவ­ரது போத­னை­களை முற்­று­மு­ழு­தா­கவே ஏற்றுக் கொண்­டவர் என்­பதும், அவ்­வப்­போது, பிரேமானந்தாவின் ஆசி­ர­மத்­துக்குச் சென்று அங்கு நடை­பெறும் வழி­பா­டு­களில் கலந்­து­கொண்டு வருபவர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

சில மாதங்­க­ளுக்கு முன்னர், சென்­னையில் நடந்த அஞ்­சலிக் கூட்டம் ஒன்றில் நினைவுரையாற்றச் சென்­றி­ருந்த போதும், அவர் பிரே­மா­னந்தா ஆசி­ர­மத்­துக்குச் சென்று வழி­பாடு செய்த பின்னர், ஒரு நாள் அங்கு தங்­கி­யி­ருந்து விட்டுத் தான் திரும்­பி­யி­ருந்தார்.

பிரே­மா­னந்தா மீதும், அவ­ரது சீடர்கள் மற்றும் ஆசி­ரமம் மீதும், குற்­றச்­சாட்­டு கள் சுமத்­தப்­பட்டு, அவர்களுக்குத் தண்­ டனை விதிக்­கப்­பட்ட பின்­னரும் கூட, அவரைப் பின்­பற்றி வரு­பவர் விக்னேஸ் ­வரன். அதை அவர் மறைக்­கவும் இல்லை.

மறுக்­க­வு­மில்லை. இந்தப் பின்­னணி, அவர் மீது, இந்­திய நாளிதழ் குற்­றச்சாட் டைச் சுமத்­து­வ­தற்கு வச­தி­யாகிப் போனது.

 

பிரே­மா­னந்­தாவின் ஆன்­மீக வழியை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் பின்­பற்­று­வது அவரதுதனியுரிமை.

அதே­வேளை, ஒரு முன்னாள் நீதி­ய­ர­ச­ராக இருந்து கொண்டும், முத­ல­மைச்­ச­ராக இருந்து கொண்டும், சர்ச்­சைக்­கு­ரிய ஒரு­வரைப் பின்­பற்­று­வ­தாக முன்­னி­றுத்த முனையும் போது, இத்­த­கைய சிக்­கல்­களை சந்­திக்­கவே வேண்­டி­யி­ருக்கும் என்­ப­தையும் மறுக்க முடி­யாது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், தாம் இந்தக் கடி­தத்தை எழு­த­வில்லை என்றும், உற­வி­னர்கள் தமக்கு அனுப்­பிய கடி­தத்­தையே இந்­தியப் பிர­த­மரின் கவ­னத்­துக்கு கொண்டு சென்­றி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்டிருந்­தாலும், தண்­டனை அனு­ப­விப்­போரின் உற­வி­னர்கள், முத­ல­மைச்­சரை இதற்குப் பயன்­ப­டுத்த முனைந்­தி­ருப்­ப­தற்குக் காரணம், அவர் பிரே­மா­னந்­தாவின் பக்தர் என்­ப­த­னா­லே­யாகும்.

எவ்­வா­றா­யினும், இந்த விவ­கா­ரத்தை, இந்­திய ஊட­கங்கள் சில, இந்­தி­யாவின் நீதித்­துறை மீதான தலை­யீ­டாகக் காண்­பிக்க முனைந்­தன.

முத­ல­மைச்­ச­ராக இருக்­கின்ற ஒருவர், அதுவும், முன்னாள் நீதி­ய­ர­ச­ராக இருந்த ஒருவர், இன்­னொரு நாட்டின் நீதித்­து­றையில் தலை­யீடு செய்ய முனை­ய­மாட்டார் என்­பதை குறிப்­பிட்ட இந்­திய நாளிதழ் அறி­யா­தி­ருக்­காது.

ஆனாலும், இந்த விவ­கா­ரத்­துக்குள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இழுக்­கப்­பட்­டுள்­ளதன் பின்­னணி சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

அதா­வது, வடக்கு மாகாண முத­ல­மைச்சர் செய­லகம் குறிப்­பிட்­டது போல, விக்­னேஸ்­வ­ரனின் பெயரைக் கெடுப்­பதே, புது­டில்­லியை மைய­மாகக் கொண்ட இந்­திய ஊட­கங்­களின் நோக்­கமா என்று சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது.

புது­டில்லி அதி­கார மட்டம், அல்­லது அங்­குள்ள கொள்கை வகுப்­பா­ளர்கள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை ஒரு­வித அச்­சத்­துடன் பார்ப்­ப­தையும், அவர் மீது வெறுப்பை பாராட்­டு­வ­தையும் அண்­மைக்­கா­ல­மாக உணர முடி­கி­றது.

குறிப்­பாக, வடக்கு மாகாண சபையில் இனப்­ப­டு­கொலைத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட விவ­காரம், இலங்கை அர­சாங்­கத்தைப் போலவே, இந்­தி­யா­வுக்கும், நெரு­டலை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கின.

இந்தப் பின்­ன­ணியில், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கடந்த மார்ச் மாதம், இலங்­கைக்கு மேற்­கொண்ட பய­ணத்தின் போது, வடக்கு மாகாண முத­ல­மைச்­சரைச் சந்­திக்க வேண்டாம் என்று, கொள்கை வகுப்­பா­ளர்­களால் ஆலோ­சனை கூறப்­பட்­ட­தா­கவும் கூட, சில ஊட­கங்­களில் தக­வல்கள் வெளி­யா­கின.

ஆனாலும், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர அதனை நிரா­க­ரித்து விட்டு, முத­ல­மைச்­சரைச் சந்­தித்­த­துடன் அவ­ருடன் இணைந்து நிகழ்­வு­க­ளிலும் பங்­கேற்­றி­ருந்தார்.

பா.ஜ.க அரசு மீது செல்­வாக்குச் செலுத்தும் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிசத் போன்ற அமைப்­பு­களின் தலை­வர்கள் மத்­தியில், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஆன்­மீக ரீதி­யான நெருக்­கத்தைக் கொண்டிருப்­பது, கூட, மோடி அவரைத் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது போன­தற்கு கார­ண­மாக இருந்திருக்கலாம்.

34இந்­த­நி­லையில், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனைப் புறக்­க­ணிக்­கு­மாறு இந்­தியப் பிர­த­ம­ருக்கு ஆலோசனை கூறப்­பட்­டது பற்­றிய செய்தி எந்­த­ள­வுக்கு உண்­மை­யாக இருக்கும் என்று கூற முடியாவிடினும், புது­டில்லி அதி­கார மட்டம், அவரை கொஞ்சம் தள்­ளியே வைத்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

உதா­ர­ணத்­துக்கு, இந்­தியப் பிர­தமர் மோடியைச் சந்­திக்க முத­ல­மைச்சர் விரும்­பிய போதிலும், அவரைப் புது­டில்லி அழைக்­க­வில்லை.

சில மாதங்­க­ளுக்கு முன்னர் புது­டில்­லியில் நடந்த மாநாட்டில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் பங்கேற்­றி­ருந்த போதிலும், இந்­தியப் பிர­தமர் அவரைச் சந்­திக்­க­வில்லை.

அதே­வேளை, யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த போது, அவரைச் சந்­தித்துப் பேசி­யி­ருந்தார்.

வடக்கு மாகாண சபையில் இனப்­ப­டு­கொலைத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட பின்னர், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை இந்­தியக் கொள்கை வகுப்­பா­ளர்கள், சற்று ஆபத்­தா­ன­வ­ராகக் கணிக்க முனை­வது போல் தெரி­கி­றது.

அதா­வது, இலங்­கை­யிலும், புலம்­பெயர் தேசங்­க­ளிலும், உள்ள தமிழ்த் தேசிய சக்­தி­க­ளுக்கு அவர் தலைமை தாங்கக் கூடுமோ என்ற அச்சம் உரு­வா­கி­யி­ருக்­கலாம்.

அண்­மையில், புது­டில்லி கொள்கை வகுப்­பா­ளர்­க­ளுக்கு நெருக்­க­மான- ஊட­க­வி­ய­லா­ள­ரான எம்.ஆர்.நாரா­ய­ண­சாமி எழு­தி­யி­ருந்த கட்­டுரை ஒன்றில், இந்த விவ­கா­ரத்தைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

விடு­தலைப் புலிகள் குறித்தும், பிர­பா­கரன் குறித்தும் Tigers of Lanka, Inside an Elusive Mind- Prabhakaran, The Tiger Vanquished – LTTE’s Story ஆகிய நூல்­களை ஆங்­கி­லத்தில், எழுதியிருப்பவர் தான் எம்.ஆர்.நாராயணசாமி.

இலங்கையில் தமிழ் கடும்போக்குவாத சக்திகள் விடயத்தில் இந்தியா அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதில், முதலமைச்சர் விக்னேஸ்ரவன் குறித்தும் கூறப்பட்டிருந்தது.

இதனால், முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழர்கள் மத்தியில், செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்துள்ள நிலையில், அவரது பெயரைக் களங்கப்படுத்துவதன் மூலம், தமிழர்களின் மத்தியில் உள்ள செல்வாக்கை சீர்குலைக்க முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.

ஏற்கனவே, அவருக்கு எதிராகக் கொழும்பின் அதிகார சக்திகளும் மறைமுக யுத்தம் ஒன்றைத் தொடுத்துள்ள நிலையில், புதுடில்லி ஆங்கில ஊடகங்களும், அதே வழியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளமை, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.

இது அவரை அரசியலிலிருந்தும், தமிழ் மக்களிடத்திலிருந்தும் அந்நியப்படுத்தும் முயற்சியாக மட்டும் கருதமுடியவில்லை..

தமிழரின் அரசியல் பலத்தை சிதைக்கும் நோக்கத்தையும் கொண்டதாக இருக்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version