அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர நடைப் பாதை பாலத்திலிருந்து சுமார் 20 ஆயிரம் ‘காதல் பூட்டுகள்’ அவிழ்க்கப்படவுள்ளன.

காதல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலும் அன்பை பகிரும் விதமாகவும் காதல் ஜோடிகள் தங்களது பெயரை பூட்டில் எழுதி, அதனை மெல்பேர்ன் நகர நடைப் பாதை பாலத்தின் கம்பிகளில் கட்டி செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.

MELBOURNE_Lovers-p_3307877bஇந்த நிலையில், மெல்போர்ன் நடை பாதை பாலத்தின் கம்பிகளில் பூட்டுகள் நிறைந்து தொங்குவதால், பாலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பூட்டுகளை அவிழ்க்க மெல்பேர்ன் நகர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக மெல்போர்ன் மேயர் டோயல் கூறும்போது, “மெல்பேர்னில் உள்ள காதல் பூட்டுகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது உண்மைதான். அதற்காக இதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. பாலத்தின் பாதுகாப்பு அதை விட முக்கியமானது.

இங்கு தொங்கும் சுமார் 20,000 பூட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று எனக்கும் புரியவே இல்லை” என்றார்.

பிரான்ஸின் பரிஸ் நகரில் உள்ள இதுபோன்ற பாலம் கடந்த 2014-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. விபத்து ஏற்பட்ட பாலத்தின் கம்பிகளில் சுமார் 700,000 ‘காதல் பூட்டுகள்’ இருந்தது குறிப்பிடத்தக்கது.

 The council said there had been a boom in the padlock fad, with just 7,000 counted in June compared with 20,000 during a recent count.

The locks will be slid off the cables rather than destroyed.

A couple kisses on the Pont des Arts in Paris

Share.
Leave A Reply

Exit mobile version